28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அமுதன் அடிகள் வாழ்வும் பணியும்

Published On :

அமுதன் அடிகள் வாழ்வும் பணியும் (ஆய்வு நூல்) - நெய்தல் யூ அண்டோ; பக். 156; ரூ.140;  அம்மா பதிப்பகம், தூத்துக்குடி-1; ✆ 99408 67562.

தமிழ்நாட்டில் முத்துக்குளித்தலுக்கு  சிறப்புப் பெற்ற ஏழு ஊர்களில் ஒன்று புன்னைக்காயல். போர்ச்சுகீசியர் இங்கு வந்து தங்கிதான் முத்துக்குளித்தலில் ஈடுபட்டனர் என்று தனது சொந்த ஊரான 'புன்னைக்காயல் வரலாற்று நூலில்' அமுதன் அடிகள் எழுதியுள்ளார். 

அமுதன் அடிகளின் இறைபணிப் ஐம்பதைக் கணக்கிட்டு,  இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. அவர்  தஞ்சாவூர் மற்றும் ரோம் நகரில் கல்வி கற்றது, 'வாடிகன் வானொலி'யில் தமிழ் அறிவிப்பாளராகவும்,  அச்சகப் பணி மேற்கொண்டதையும்  நூலாசிரியர் பதிவிட்டிருக்கிறார். தமிழ்நாடு வந்ததும், தஞ்சை மறைமாவட்டத்திலும்,  திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களில் ஆற்றிய  திருஆலயப் பணிகளும் ஆராய்ச்சிப் பணிகளும் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக,  கிறிஸ்தவத் தமிழறிஞர் ஆண்டிறீக்கி பாதிரியாரின் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரையை தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலும், கோவை செம்மொழி மாநாட்டில் 'சமயங்கள் வளர்த்த தமிழ்' அரங்கில் 'கிறிஸ்தவம் வளர்த்த தமிழ்' கட்டுரையையும், சிகாகோவில் உலகத் தமிழ் மாநாட்டில் அந்தாம் தே ப்ரொய்ன்தா அடிகளாரின் 'தமிழ்அகர முதலி' தொகுப்பு குறித்தும் கட்டுரை  வாசித்ததன் மூலம் சிறப்பான கவனம் பெற்றதும் கூறப்பட்டுள்ளது. 

சர் ஏ.டி.பன்னீர்செல்வம்,  வீரமாமுனிவர் குறித்த இரு நூல்கள், தனிநாயக அடிகள், குன்றக்குடி அடிகள், வள்ளலாரின் ஆன்மநேய நூல்கள் என 9 ஆராய்ச்சி நூல்களைப் படைத்திருக்கிறார்.    தெய்வீகப் பணி,  ஆராய்ச்சி, இலக்கியப் பணி ஈடுபாடுகளை அறிய உதவும் நல்லதொரு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.