தியாக வேள்வி - ந.இராசகோபாலன்; பக்.286; ரூ.125; மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப் பணி அறக்கட்டளை, கடலூர்- 607 001; ✆ 94443 54945.
சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலில், ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தியாகங்களைச் செய்தனர். இதன்பலனாகவே, இரு நூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கை அஹிம்சை எனும் ஆயுதம் கொண்டு இந்தியர்கள் உடைத்தெறிந்தனர். ஆனால், நம் பிறந்த மண்ணில், நம் அருகே வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் அவர்களது தியாகங்களும் வெளித்தெரிவதில்லை. அவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படிப்பட்டவர்களின் பெருமைகளை நூல்களாகவும், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளின் வாயிலாகவும் வெளிக்கொணர வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்திவரும் நிலையில், இந்த நூல் வெளிவந்துள்ளது.
திண்டிவனத்தில் வாழ்ந்து மறைந்த தனது தந்தை மருங்கூர் நடராஜ அய்யரின் வாழ்நாள் நிகழ்வுகளை நூலாசிரியர் தொகுத்து நூலாக்கியுள்ளார். அவரது இளம்பருவத்தில் திண்டிவனத்தில் நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழா நேரத்தில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் வாயிலாக, மக்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியது, ஆங்கிலேய அரசின் காவல் துறையினரால் தேடப்பட்டது, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தப்பிச் சென்றது, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் தனது நண்பர்களோடு இருந்த தலைமறைவு வாழ்க்கை, திருமணம், குடும்பப் பிரிவினைக்குப் பின்னர் சென்னையில் குடியேறியது, காந்தியுடனான நட்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நூலாசிரியர் உரையாடல் பாணியில், எளிய தமிழில் எழுதியுள்ளார்.
சுதந்திர வேட்கை கொண்டோர் மட்டுமன்றி, இளைய தலைமுறையினரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

