கைப்பக்குவம்- முள்ளஞ்சேரி மு.வேலையன்; பக். 470; ரூ. 500; காவ்யா பதிப்பகம், சென்னை- 24; ✆ 98404 80232.
குமரி அறிவியல் பேரவையின் 2 ஆண்டுகாலச் செயல்பாடுகள் அத்தனையையும் முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியரும் அந்தப் பேரவையின் அமைப்பாளருமான முள்ளஞ்சேரி மு.வேலையன்.
பேரவையின் கூட்ட நடவடிக்கைகள், ஆய்வு நடவடிக்கைகள், கருத்தரங்குகள் என அத்தனையும், அதில் கலந்து கொண்டோரின் பெயர்கள், அவர்கள் பேசியது, கூட்ட முடிவுகள், கள ஆய்வின்போது கிடைத்த தகவல்கள், திட்ட அறிக்கைகள் முழுமையாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்தனையும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் பார்வைகள், தீர்வுகள் குறித்த முக்கியமான பதிவுகள். இதுமட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தின் கடல், மலைகள், ஆறுகள், அணைகள், குளங்களைப் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் தேவைகள், அதற்கான பணிகள் குறித்துக் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
நூலின் முதல் பகுதிக்கு 'ஆயத்தம்' என்றும், இரண்டாம் பகுதிக்கு 'பக்குவம்' என்றும், மூன்றாம் பகுதிக்கு 'பரிமாற்றம்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 13 கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் 18 கட்டுரைகளும், மூன்றாம் பகுதியில் 28 கட்டுரைகளும் உள்ளன. அறிவியல் கட்டுரைகளை வாசிக்க இலகுவாக்கும் வகையில், ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கமும் இலக்கியக் குறிப்புகளுடன் காணப்படுகிறது.
சுற்றுச்சூழல், அறிவியல் ஆர்வலர்கள் பயிற்சிக் கையேடாக இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

