குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

'சட்டப்பேரவையில் மூக்கையாத் தேவர்- கே.ஜீவபாரதி; பக். 248; ரூ.240;  ஜீவா பதிப்பகம், சென்னை- 17; ✆ 9952079787.

மக்கள்  தொண்டராகவும்,  சமூக சேவகராகவும், ஃபார்வர்டு பிளாக் தலைவராகவும் திகழ்ந்த மூக்கையாத் தேவரின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக இந்த நூல் வெளியாகியுள்ளது.
'தேவர் திருமகன் தந்த தேவர்' என்று போற்றப்படும் மூக்கையாத் தேவர் மக்கள் நலனுக்காக, பொது பிரச்னைகளுக்காக, சட்டப் பேரவையில்  குரல் கொடுத்து வந்தார். அவரது அரசியல் அணுகுமுறை பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்தது.

தமிழகம் வளம் பெறவும், நல்ல திட்டங்கள் நிறைவேறவும் பேச்சுகள் காரணமாக இருந்தன.

சட்டப்பேரவையில் அவர் நிகழ்த்திய உரைகள் ஆவணத்தொகுப்பாகவும், அந்தக்கால அரசியல் சூழலின் நினைவுகளை பதிவு செய்யும் பொக்கிஷமாகவும்  இந்த நூல் அமைந்துள்ளது. மதுரை மண்ணின் பல்வேறு பிரச்னைகள், வைகை திட்டம், அது சார்ந்த போராட்டங்கள் என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

வரிவிதிப்பு பற்றி வழிப்பறி கொள்ளை என மூக்கையாத் தேவர் பேசிய பேச்சுகள், சபையில் ஏற்பட்ட சலசலப்புகள், ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது.

வைகைத் திட்டமும் மக்கள் போராட்டமும்,  அடிமைப் போராட்டம் இன்னும் மாறவில்லை,  வெள்ளைக்காரன் காலத்து பட்ஜெட் போன்ற பட்ஜெட், உரப்பனூர் சாவும் காவல் துறையின் அராஜகமும், புரட்சிகரமான திட்டமா? வளர்ச்சியை வளர்க்கும் திட்டமா, ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா?, தேர்தல் புத்தியா? தேசப் பக்தியா? உள்பட 30 தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றுள்ளன. 

நல்ல அரசியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற,  இன்றைய மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் இந்த நூலை படிக்க வேண்டியது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.