நம் காலத்து நாயகன் - மி.யூ. லேர்மன்தவ் (தமிழில் பூ. சோமசுந்தரம்); பக்.233; ரூ.190; அடையாளம், திருச்சி-10; ✆ 04332 273444.
காக்கேஷிய கவிஞர் என அழைக்கப்படும் ரஷ்ய படைப்பாளி மிகைல் யூரியெவிச் லேர்மன்தவ் உளவியல் நாவலான இது ஓர் இளம் ராணுவ அதிகாரியின் கதையை சொல்கிறது. அரசியல் சர்ச்சையில் சிக்கிய லேர்மன்தவ் காக்கேஷிய படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டபோது ஏற்பட்ட உந்துதலால் இந்நூலை எழுதினார்.
1830-ஆம் ஆண்டுகளில் காக்கேஷிய மலைத்தொடரில் பயணிக்கும் ஓர் இளைஞருக்கு மக்ஸீம் மக்ஸூமிச் எனும் ராணுவ அதிகாரி அறிமுகமாகிறார். ராணுவ பணிக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை இளைஞருடன் பகிர்ந்து கொள்கிறார். அப்போது பிச்சோரின் எனும் ராணுவத் தோழரின் முரண்நகையான வாழ்க்கைக் கதையை அவர் விவரிக்கிறார்.
எந்நேரமும் சிந்தனையுடன் இருக்கும் பிச்சோரின் கணிப்புத் தவறாத உளவியல் பார்வையுடன் ஆண்களையும் பெண்களையும் தன் விருப்பத்துக்கு ஏற்றபடி இசையவைக்கும் கதாபாத்திரமாக உள்ளான். அவனது செயல்கள் பலரது வாழ்க்கையை சிதைக்கின்றன. இரு பகுதிகளாக உள்ள இந்த நாவலின் முதல் இரு அத்தியாயங்கள் கதை சொல்லி போக்கிலும்,
மீதமுள்ள அத்தியாயங்கள் பிச்சோரின் நாள் குறிப்பாகவும் உள்ளன. ஆங்கிலக் கவி பைரன், ரஷியாவின் அலெக்ஸாந்தர் புஷ்கின்ஆகியோரின்எழுத்துக்களின் தாக்கத்தை இதில் காணலாம். ரஷிய இலக்கியமான இது தமிழில் எளிய நடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன மெய்யான தவிர்க்கவியலாத படைப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

