சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் - சேயன் இப்ராகிம்; பக்கம் 296, ரூ.300, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-2834 3385.

தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஆய்ந்தறியப்படாத, வெளிச்சத்துக்கு வராத பல பகுதிகள் உள்ளன.   அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான காயிதே மில்லத், கே.எஸ். அப்துல் வஹாப் ஜானிக்குப் பின்னர் வழிநடத்திய சிராஜுல் மில்லத் அப்துல் சமதின் வாழ்க்கை வரலாற்றின் ஓர் விரிவான அறிமுகத்தை தரும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 

அப்துல் சமதுவின் இளமைக்காலம்,  அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட  அரிய தகவல்களைக் கொண்ட நூல்,.  அவருக்கு  அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இருந்த அரசியல் உறவை விளக்குகிறது. 

வேலூர் கோட்டையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து விட வேண்டும் என மக்களவையில் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தில் நீர் நிரப்புமாறு சட்டப்பேரவையில் பேசியதும் அப்துல் சமது அனைத்து தரப்பு மக்களுக்கான குரலாக இருந்தார் என்பதை அறியச் செய்கிறது.

முஸ்லிம்களுடைய கல்வி,  வேலைவாய்ப்புக்காக தனி இடஒதுக்கீடு,  தமிழ் இலக்கியப் பங்கு, சமகால முஸ்லிம் அரசியல் வரலாற்று சூழலைப் புரிந்து கொள்ளும் வகையில் நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.   பல புதிய தகவல்களும் உள்ளன. அரசியல், வரலாற்று ஆர்வம் கொண்டவர்களும் படித்தறிய வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.