தன் வரலாறு ஓர் இலக்கிய வடிவம் - தொகுப்பாசிரியர் தமிழவன்; பக்.160; ரூ.400; சாகித்திய அகாதெமி, சென்னை- 81; ✆ 044-24311741.
சாகித்திய அகாதெமியின் ஒருநாள் உரையரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
நூலில் 6 கட்டுரையாளர்கள் மூலம் தனிமனிதரின் அனுபவத் தொகுப்புகளில் இருந்து தன்வரலாறு எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தொகுப்பாசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. புனைவு படைப்புக்கும், தன் வரலாறுக்கும் வேறுபாடு தெரியாமலேயே எழுத்தாளர்கள் இருப்பதாகவும் தொகுப்பாசிரியர் கவலைப்படுகிறார்.
திரைப்படங்களின் கதாபாத்திரங்களை உதாரணமாக்கி, தன்வரலாறு தனி இலக்கியமாகுமா என்பதை படிப்போர் எளிதில் புரியும்படி விளக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
'சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் தன்வரலாறு' என்பது தனிப்பட்டவரின் வாழ்க்கைக் கதை என்பதற்கு அப்பால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகம், அரசியல், வரலாறு, பிரெஞ்சு இலக்கியம் ஆகியன குறித்த தகவல் பேழையாக அமைய வேண்டும் என விளக்கம் தருகிறார். வீ.அரசுவின் கட்டுரையில், முக்கியமான எழுத்தாளர்களது தன்வரலாறு எப்படி அமைந்துள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.
அழகிய பெரியவனின் ' தமிழ் இலக்கிய மரபும், தலித் தன்வரலாறுகளின் வரலாறும்' எனும் கட்டுரையில், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் எழுதிய தன்வரலாறுகளில் மேற்கொண்ட ஆய்வும், சங்கப் பாடல்கள் மூலம் தற்கால மக்கள் நிலையை அறிய முயன்றிருப்பதும் அரிய செய்திகளாகும். தன்வரலாறு குறித்த ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது இலக்கிய ஆய்வாளர்களுக்கு சிந்தனைக்குரிய களம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

