கனவில் தொலைந்தவன் - கிரண் நகர்க்கர் (தமிழில் அக்களூர் இரவி); பக். 800; ரூ.1,100; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; 044 - 24311741.
ராஜபுத்திரர்களின் பண்பாட்டு அம்சங்களை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளுடன் புனையப்பட்ட இந்த நாவல் 16-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடைபெறுகிறது. இதன் ஆங்கில மூலநூலான சாகித்திய அகாதெமி விருது பெற்ற "கக்கோல்ட்' என அமைந்திருந்தாலும், கதையின் போக்கை வெளிப்படுத்தும் வகையில் "கனவில் தொலைந்தவன்' எனத் தமிழில் தலைப்பிட்டுள்ளது சிறப்பு.
மேவாரின் இளவரசன் மகராஜ் குமார் வழியில் கதை செல்கிறது. பிளவுபட்டிருந்த ராஜபுதன அரசுகளை முதன்முறையாக ராணா சங்கா ஒன்றிணைத்த நிலையில் வடகிழக்கில் லோடி வம்சத்தினர், தென்மேற்கில் குஜராத் ராஜ்ஜியம், தென் கிழக்கில் மால்வா ராஜ்ஜியம் என மூன்று புறமும் எதிரிகள் காத்திருந்தனர்.
தனது தம்பியின் அரியணை போட்டிக்கான சதிகளை மகராஜ் குமார் எதிர்கொள்கிறான். மேர்த்தாவின் இளவரசி உள்பட மூன்று பெண்களை திருமணம் செய்தாலும் இளவரசனின் மணவாழ்க்கை சரியாக அமையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், போரைவிட சமாதானம்தான் நாட்டுக்கு நல்லது எனும் இளவரசனின் கோட்பாடு நேருக்கு நேர் போரிட்டு வெல்வது அல்லது உயிர் துறப்பதே வீரம் எனும் ராஜபுத்திரர்களின் கோட்பாடுக்கு முரணாக உள்ளது. இதனால் அவன் ஒரு கோழையாக சித்தரிக்கப்படுகிறான். பின் கொரில்லா யுத்தி முறையை அறிமுகம் செய்து இரு போரில் மேவாருக்கு வெற்றி பெற்று தந்தாலும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
நூற்றாண்டுகளுக்கு மேலாக போர் செய்யும் மரபை மாற்றிக் கொள்ளாத ராஜபுத்திரக் கூட்டணி நவீன போர் யுக்தியுடன் 40 ஆயிரம் போர் வீரர்களுடனான பாபர் படை முன்பு சிதறுகிறது. பாபர் வருகையோடு "கனவில் தொலைந்தவன்' கலைகிறது. ராஜபுத்திரர்களின் வரலாறு, பண்பாடு, நாகரிகத்தை அறிய உதவும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

