சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் - மே.து.ராசு குமார்; பக்.228; ரூ.320; நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50, ✆ 044 - 26359906.
'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஆன்றோர்கள் சொல்லியதற்கும் காரணம் உண்டு. கோயில் இருந்தால் திருவிழா நடக்கும். மக்கள் கூடுவார்கள்.
சந்தைகள், கடைகள் ஏற்படுத்தப்பட்டு வியாபாரம் நடக்கும். பலருக்கும் தொழில் கிடைக்கும். வருமானம் அதிகமாகும். இதை உணர்ந்தே மன்னர்கள் பெரிய கோயில்களைக் கட்டி வைத்து, அவற்றின் செயல்பாட்டுக்கு நிலங்களைத் தானமாக அளித்தனர்.
இதனால்தான் கோயில்கள் இன்றளவும் ஒரு நிறுவனமாக செயல்படுவதுடன் சிலநூறு குடும்பங்கள் அதனைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றன. இதை ஆதாரத்துடன் விளக்கும் புதிய சிந்தனையிலான ஆசிரியரின் படைப்புதான் இந்த நூல்.
கோயில்களுக்கு சோழர் காலத்தில் நிலம் வழங்கப்பட்டதன் பின்னணி, அரசின் பங்களிப்பு, கோயிலுக்கு எதிரான குற்றங்கள், கோயில் நில உற்பத்தியாளர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கோயில்களைப் பற்றியும் நிலவுடைமைப் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
தொல்லியல் துறை சார்ந்த பணி அனுபவத்தோடு கல்வெட்டு ஆதாரங்களைத் தொகுத்து வடிவமைத்துள்ள இந்த நூலில் கோயில் நிலங்கள் யாருக்கு எந்த வகையில் பயன்பட்டன? அதனால் ஏற்பட்ட மீட்சி என்ன? என்பதையும் விளக்குகிறது. மேலும், இறைபணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்த அடிப்படையில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது என்பதை சோழர்கால கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

