தமிழ் இலக்கிய வரலாறு வினாடி- வினா - வடுவூர் சிவ.முரளி; பக்.304; ரூ.290; வசந்தா பிரசுரம், சென்னை-33; ✆ 90948 75747.
சங்க இலக்கியம் தொடங்கி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரை தமிழிலக்கியப் பரப்பை ஒவ்வொரு வரியில் அறிமுகப்படுத்துகிறது. மொத்த சங்கப் பாடல்களின் எண்ணிக்கை 2,381 என்பதில் தொடங்கி, கருவாயிருந்தபோதே அரசுரிமை எய்தியவன் கரிகாலன், முற்பிறவியில் மணிமேகலையின் பெயர் இலக்குமி, தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம், நன்னூலுக்கு முதலில் உரை எழுதியவர் மயிலைநாதர், தமிழ் உரைநடையின் வேந்தர் எனப்படுபவரே ஆறுமுக நாவலர், ஆர்.சூடாமணியின் சிறுகதைகளை மராத்தியில் மொழிபெயர்த்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ., தமிழ் ஒளி நடத்திய இதழ் ஜனயுகம், தமிழ்வாணனின் இயற்பெயர் இராமநாதன், எழுத்தாளர் இமையம் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது அவர் எழுதிய 'செல்லாத பணம்' எனும் நாவலுக்காக.. என்று ஏராளமான தகவல்கள் உள்ளன.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார், சேக்கிழார், ஆழ்வார்கள், நாயன்மார், சிற்றிலக்கியம், உரையாசிரியர்கள், நாடகங்கள், கவிஞர்கள் என தனித்தனியே பிரித்துக் கொடுத்திருப்பது சிறப்பு.
குறிப்பாக, மலையில் எழும் ஓசையும் யானையின் கன்னத்தில் வடியும் கடாம் என்னும் மதநீரும் ஒப்பிடுவதால்தான் மலைபடு கடாம் நூல் அப்பெயர் பெற்றது என்பதும், சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியின் தலைவன் பிறந்த இடம் சுடுகாடு என்பதும், சி.கே.சுப்பிரமணிய முதலியார் எழுதிய தன் வரலாற்று நூலின் பெயர் 'ஒரு பித்தனின் சுய சரிதம்' என்பதும் வியப்பூட்டும் செய்திகளாகும். இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் எளிய கையேடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

