சினிமா போஸ்டர் - ஈஸ்வர்; பக்.184; ரூ.300; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-26; ✆ 044- 2365 2007.
இளமைக் காலத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்து, திரை ஓவியத் துறையில் 1967-இல் தொடங்கி 2,000-ஆம் ஆண்டு வரையில் 313 தமிழ்ப்படங்களுக்கு விளம்பர ஓவியங்களை ஈஸ்வர் வரைந்துள்ளார். இதுதவிர, தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களுக்கும் ஓவியங்களை வரைந்தவர். அவர் வரைந்த எஸ்.எஸ்.வாசன், நாகி ரெட்டியார், சக்கரபாணி, எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஓவியங்களைப் பார்க்கும்போது, நிஜத்தைப் போலவே தென்படுகிறது.
இளம்வயது அனுபவம், கலைப்பயணம், நாடக அரங்கேற்றம், தனது குடும்பச் சூழல், வாழ்க்கை நிலை, ஊர்கள் இடம்பெயர்தல், திருமணம், திரைத்துறை பிரவேசம் உள்ளிட்ட ஈஸ்வரின் வாழ்க்கை அனுபவத்தைப் படிக்கும்போது, அவரது சாதனைக்குப் பின்னால் உள்ள சோதனைகள் கண்களில் நீரை வரவழைக்கிறது.
எம்ஜிஆர். , சிவாஜி, சின்னப்ப தேவர் உள்ளிட்ட திரைத்துறை பிரமுகர்கள் குறித்த ருசிகர தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.
வீட்டில் சண்டையிட்டு பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்து பரிசோதகரிடம் சிக்கிய எம்.கோவிந்தசாமி நாயுடுவுக்கு சக பயணி அபராதம் செலுத்தி, பெங்களூருக்கு அழைத்துச் சென்று தையல் பயிற்சி அளித்ததும், அவர் 1939-இல் சென்னை தி.நகரில் தையல் கடை வைத்து 'நாயுடு ஹால்' என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நிறுவியதும் என பல வியப்பூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இளைய தலைமுறை ஓவியர்களுக்கு வழிகாட்டும் நூல்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கொடியாலத்தில் மயானச் சாலை கோரி மாா்க்சிஸ்ட் முற்றுகைப் போராட்டம்

5 ஆண்டுகளில் 4.29 லட்சம் வீடுகள் ஒப்படைப்பு: தமிழக அரசு தகவல்

ஈரான் மீதான தாக்குதல்: அறந்தாங்கியில் ஆா்ப்பாட்டம்

அரசு கல்வி நிலையங்களில் போக்சோ சட்ட விழிப்புணா்வு முகாம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

