சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

நல்லோர் போற்றும் நல்லி - தொகுப்பு ஆர்.நடராஜன்;  பக்.178; ரூ.100; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; ✆ 044- 2815 1160.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் குறித்த இந்த நூல் 2011-ஆம் ஆண்டில் வெளியானது.  கூடுதல் விவரங்களுடன் இரண்டாம் பதிப்பாகத் தற்போது வெளியாகியுள்ளது.

ஆன்மிகம், கலை, இலக்கியம், தொண்டு, உதவிபுரியும் பாங்கு... என்று பல்வேறு தனித்துவங்களைப் பெற்றுள்ள அவர் குறித்து அறியாத விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பணிபுரியும் ஊழியர்கள் 'நல்லி சில்க்ஸ்' நிறுவனத்தில் உண்டு;  குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்,  ஈரான் நாட்டு மன்னர் ஷா,  இலங்கை நாட்டின் பண்டாரநாயக போன்ற முக்கிய பிரமுகர்கள் கடைக்கு வந்து சென்றதுண்டு; ராஜ் பவனில் தங்கும் விருந்தினர்கள் நல்லி பட்டுச் சேலைகளைப் பெற்றிருக்கின்றனர்' என்ற வியத்தகு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிப் பருவத்திலேயே தன்னுடன் படித்த பல மாணவ நண்பர்களுக்கு உதவியிருப்பதை அறியும்போது,  வள்ளல் தன்மை இடையில் வருவதல்ல என்பதை உணர முடிகிறது.

ஊரன் அடிகள், ஏ.நடராஜன், பொன்.பரமகுரு, சரஸ்வதி ராமநாதன், அஸ்வினி, பி.என்.விஜயராகவன்,  ரமா ராகவன், கலைமாமணி விக்கிரமன், எஸ்.பி.மெய்யப்பன்,  டி.கே.பாலச்சந்திரன்,  ஆர்.நடராஜன், கலைமாமணி யோகா,  ராயா ஆர்.கோவிந்தராஜன்,  ஆரூர் தாஸ்,  இரா.முத்துக்குமாரசாமி,  நாச்சியப்ப ஞானதேசிகர் ஆதீனகர்த்தர் போன்றோர் எழுதிய கட்டுரைகளில் நல்லி குறித்து ஏராளமான விஷயங்களை அறியலாம்.  அவர் குறித்த கவிதைகளும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

'கலைமாமணி', 'பத்மஸ்ரீ'... என்று பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும்,  நூலைப் படித்து முடித்தவுடன் 'வள்ளல்' என்ற பட்டத்தை அளிப்போம் என்பதே உண்மை.  அவரைப் பற்றி அதிசயிக்கும் தகவல்களை அறிய நல்லதொரு நூல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.