அன்பின் முகங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில் - குறிஞ்சிவேலன்); பக்.240; ரூ.250; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17; ✆ 97910 71218.
மலையாள இலக்கிய உலக ஆளுமை யான நூலாசிரியர், சாகித்திய அகாதெமி, ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர். இவரது தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்.
மூலக்கதையை அச்சுப்பிசகாமல் மொழியாக்கம் செய்யும் திறன் படைத்த குறிஞ்சிவேலனின் எழுத்துகள்.
9 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது மனைவியின் சிகிச்சைக்காக, பூர்விகச் சொத்து தொடர்பாக அண்ணனைக் காண செல்லும் தம்பியின் உணர்வுகளும் உரையாடல்களும் கொண்ட சிறுகதையின் பெயர்தான் 'அன்பின் முகங்கள்'. சிறுவயது சகோதர மோதல், அத்தை மகளை மணமுடிப்பது.. என்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களும் படிக்கும்போதே நெஞ்சில்
நிழலாடுகிறது.
தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் 'முகத்திரை', தனிமையில் உறவுகளை நினைத்து யோசிக்கும் 'அந்தி வெளிச்சம்', 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிமையில் வசிக்கும் தந்தையைத் தேடி செல்லும் ராகவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'சருகுகள் மூடிய', இலங்கைக்குச் செல்லும் பயணியின் நினைவுகளை வெளிப்படுத்தும் 'கடுகண்ணாவா; ஒரு பயணக்குறிப்பு', தாயும் பாட்டியும் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடும் இளைஞரின் பாச நினைவுகளை வெளிக்கொணரும் 'ஒரு பிறந்தநாள் நினைவு', பண்டிகை கொண்டாடத்துக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'பட்டாசு' ... என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வோர் விஷயங்களை வெளிப்படுத்துகிறது.
கதைகளைப் படிக்கும்போது, நம் உறவுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் கண்களில் நிழலாடுகின்றன. நூலாசிரியரின் பிற நூல்களைப் படிக்கும் ஆவலை இந்த நூல் தூண்டிவிடுகிறது. சிறுகதை பிரியர்களுக்கு சந்தோஷமான அனுபவம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்: ஜி.கே. வாசன்

நேபாளத் தோ்தல்: 4 முறை பிரதமரான கே.பி.சா்மா ஓலியை வீழ்த்திய இளம் தலைவா் பாலேந்திர ஷா!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

