சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்

News image
Updated On :28 மே 2023, 6:30 pm

DIN

புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள், தமிழவன்;  பக். 150; ரூ. 160, அடையாளம் பதிப்பகம்,  திருச்சி- 621310; ✆ 04332 273444.

15 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூலின் தலைப்பு பிரதான கட்டுரையாகும்.  புதுக் கம்யூனிச சிந்தனை இன்று வரை உலகம் கண்ட எல்லாத் தத்துவம், கோட்பாடு, உளவியல் ஆய்வு எனப் பின்நவீனத்துவம் வரை எல்லா மேற்கத்திய, கிழக்கத்திய சிந்தனைகளின் முக்கியமான அம்சங்களை உட்கிரகித்துத் தோன்றியது எனலாம் என்கிறார் நூலாசிரியர்.

அணுஆயுதப் பெருக்கமும், புவி வெப்பமயமாதலும், குளோனிங் மூலமாய் மனிதன் மறுவுற்பத்தி செய்யப்படுவதும் புதுப் பிரச்னைகளாய் வந்துள்ளன எனக் குறிப்பிடும் நூலாசிரியர், 
கட்டுப்பெட்டி கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுயபரிசீலனை செய்து, புதுக் கம்யூனிசத்தின் கருத்துகளை புதுக்காற்றை ஏற்க முன்வர வேண்டும், புதிய விவாதங்களை உருவாக்க வேண்டும் என்கிறார்.

கம்யூனிசக் கட்சிகள் சுயவிமரிசனத்துக்குத் தயங்கக் கூடாது என்பதுதான் புதுக்கம்யூனிசம் கட்டுரையின் அடிப்படையாகத் தெரிகிறது. இத்தொகுப்பின் பெரும்பாலானவை இலக்கியம், கவிதை சார்ந்த கட்டுரைகள். ஞானக்கூத்தன், தமிழச்சி ஆகியோரைப் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

2011 அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்த ஒரு கட்டுரையும், சிங்கப்பூர் தமிழ் முரசு இதழின் செய்தி ஆசிரியர் லதா எழுதியுள்ள சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு கட்டுரையும், பின்நவீனத்துவம் குறித்து ஏ.எஸ். திரவியம் எழுதி நூலைப் பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

எல்லாக் கட்டுரைகளிலும் மேலைநாட்டு அறிஞர்கள், இலக்கியவாதிகளின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.  தத்துவ இலக்கியவாதிகள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.