முடங்கலில் மலர்ந்த மலர்கள் - பேராசிரியர் தி.இராசகோபாலன்; பக்.208; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
தமிழ் இலக்கியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத சக்தியான நூலாசிரியர் கரோனா காலத்தில் முடங்கிக் கிடக்காமல் 28 கட்டுரைகளை எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
அம்பேத்கர், விளாத்திக்குளம் சுவாமிகள், கேசவதாஸ், பஞ்சாப்பின் தேஜ்பகதூர் சிங், மகாராணா பிரதாப் சிங், எம்ஜிஆர், நாணயவியல் அறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருலோக சீதாராம், என்.சங்கரய்யா, கலாசேத்ரா கலைவாணி, பெரியவர் கோரா உள்பட 13 ஆளுமைகளைப் பற்றி பல்வேறு அரிய விஷயங்களை நூலாசிரியர் எடுத்துரைத்திருக்கிறார்.
ஆளுமைகளைக் குறிப்பிட்ட அதே வேளையில், திருக்குறள், சைவ, வைணவத்தின் பெருமைகள் குறித்த ஆன்மிகக் கட்டுரைகள் அதிசயிக்க வைக்கின்றன. உடல், மன வலிமைகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரே சாதனம் ரமலான் நோன்பு என்பதை விளக்கும் 'ரமலானின் மகத்துவம்' எடுத்துரைக்கிறது.
செய்யும் தொழிலே தெய்வம், ஆயுதபூஜை, மத்திய மாநில உறவுகள், உளவு ஆய்தல், பெருந்துயரின் பிடியில் சிக்கிய நாடோடிகள், பாரதத்தைத் தாக்கிய புற்றுநோய்... போன்ற கட்டுரைகள் சமூகத்தின் அவலத்தை ஆராய்கின்றன
புரட்டினால் சுவாரசியமாகவும், படிக்கவே பெருமிதமாகவும் எழுத்து நடையால் நூலாசிரியர் கவருகிறார். அரசியல், ஆன்மிகம், இலக்கியம், ஈகை குணம், உழைப்பு... என்று பல்வேறு விஷயங்களை ஒற்றை நூலில் அளித்து வாசகர்களை வியக்க வைத்திருக்கிறார். ஒற்றை நூலில் ஓராயிரம் தகவல்களை அறிய இந்த நூலை வாசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்: ஜி.கே. வாசன்

நேபாளத் தோ்தல்: 4 முறை பிரதமரான கே.பி.சா்மா ஓலியை வீழ்த்திய இளம் தலைவா் பாலேந்திர ஷா!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

