வண்ணம் பூசிய பறவை - ஜெர்ஸி கோஸின்ஸ்கி; தமிழில் - பெரு.முருகன்; பக். 280; ரூ.377. வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை, ✆ 72000 50073.
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானிய படைகள் ஏற்படுத்திய கொடுந்துயரை மையமாக வைத்து பல படைப்புகள் வெளியாகியுள்ளன. அதன் நீட்சியாக உண்மையும், தழுவலும் இரண்டறக் கலந்த எதார்த்த புனைவாக வெளியாகியுள்ளது இந்நாவல்.
போரின்போது நாஜி படைகளுக்கு எதிராக செயல்பட்ட யூதர்கள் அனைவரும், தங்களது உயிரைக் காத்துக் கொள்ள நாடோடிகளாய் திரிந்து உழன்ற தருணத்தில் ஒரு யூதத் தம்பதி, தங்களது ஐந்து வயது மகனைக் காப்பாற்றுவதற்காக வேறு ஒருவருக்கு அவனைத் தத்துக் கொடுத்துவிட்டு, தாங்களும் தப்பிச் செல்கின்றனர்.
அதுவரையிலும் அரவணைப்பையும், அன்பையும் பஞ்சமின்றி அனுபவித்த அந்தச் சிறுவன், ஆதரவற்ற ஒரு சூழலுக்கு தள்ளப்படுகிறான். வளர்ப்புத் தாயும் இறந்துவிட வாழ்வதற்கான வழியைத் தேடி அந்தச் சிறுவன் பயணப்பட்ட கதையை இந்நூல் பேசுகிறது. மழலை மொழி மாறாத வயதில் விதியின் வலியை எதிர்கொண்ட சிறுவனின் அனுபவப் பகிர்வு இது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எத்தனையோ கிராமங்கள், மலைகளைக் கடந்து கால் போன போக்கில் செல்லும் அச்சிறுவன் எண்ணற்ற மனிதர்களை எதிர்கொள்கிறான்.
இந்நாவலில் பல கதாபாத்திரங்கள், பல்வேறு பெயர்களில் சித்தரிக்கப்பட்டு வாசகர்களுடன் நேசம் கொள்கின்றன. ஆனால், கதையின் நாயகனான அந்தச் சிறுவனுக்கு நாவலாசிரியர் பெயர் வைக்கவில்லை. நாவலை வாசித்து முடிக்கும்போது பெயரில்லா அந்தச் சிறுவனை தனி ஒரு மனிதனாக அடையாளப்படுத்த முடியவில்லை. உலக நாடுகளின் ஆதிக்க வெறியால் நிகழ்த்தப்பட்ட போரில் சிதைந்தழிந்த எளிய மக்களின் ஒட்டுமொத்த உருவமாகவே அவனை உணர முடிகிறது.
போர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடுகின்றன. ஆனால், அவை ஏற்படுத்திய ரணங்களுக்கு எப்போதும் முடிவில்லை. இதுவே இந்நாவலின் சாராம்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக இருக்கும்: ஜி.கே. வாசன்

நேபாளத் தோ்தல்: 4 முறை பிரதமரான கே.பி.சா்மா ஓலியை வீழ்த்திய இளம் தலைவா் பாலேந்திர ஷா!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

