இலங்கை - எழுதித் தீரா சொற்கள் - ரமாதேவி இரத்தினசாமி,; பக். 240; ரூ.300; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை- 4; ✆ 75500 98666.
இலங்கையின் வளம், சிறப்பு, வரலாறு, வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற விஷயங்களை பெருமிதத்துடன் நினைவுகூரும் பதிவுகளைக் கொண்டிருக்கிறது இந்த நூல்.
42 இயல்கள் கொண்ட இந்த நூலொரு முழுமையான பயண நூலோ, வரலாற்று நூலோ அல்ல என்றே ஆசிரியர் குறிப்பிட்டாலும் இரண்டுமாகவே அமைந்திருக்கிறது.
மீண்டும் ஒலிபரப்பைத் தொடங்கிய இலங்கை வானொலி சேவையைக் குறிப்பிடும்போது, ஆசியாவின் முதல் வானொலி நிலையம், உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையையும் பேசுகிறார் ஆசிரியர்.
உணவுகளைப் பேச எடுத்துக் கொள்ளும் போது, ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர் உணவுப் பழக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. அதைப் போலவே, பெருக்குமரம், மன்னார் பாலம் பற்றியும் ஏராள தகவல்கள்.
தமிழுக்கு மதுவென்று பேர் என்ற கட்டுரையில் இலங்கைத் தமிழ்ச் சிறப்புகளைக் குறிப்பிடுவதுடன், 'ஓ' என்ற ஓரெழுத்துப் பேச்சு வழக்குச் சொல்லின் பெருமையும் விவரிக்கப்படுகிறது. எரியும் நினைவுகள் மற்றும் கறை படிந்த கருப்பு ஜூலை என்ற இயல்களைத் தொடர்ந்து வரும் சில இயல்களில் இலங்கைத் தமிழர் துயரம் பேசப்படுகிறது. நாங்கள் ஏன் அகதிகளானோம்? பெரிதும் கவனிக்க வேண்டிய அனுபவத்தைப் பகிர்கிறது.
ருசிக்கும் தேயிலையின் கசக்கும் உண்மைகள், பெரு நூலாக எழுதப்பட வேண்டிய விஷயங்களைக் கொண்டுள்ளது. தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் சாதியமும் குறிப்பிடத் தக்க கட்டுரை.
இலங்கையைப் பற்றி, ஈழத்தைப் பற்றிப் பெருந்துயரங்களையே வாசிக்க நேர்ந்துள்ள நிலையில், சற்று மாறுபட்டதாக வந்திருக்கிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

