தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கழுகுகளின் காடு

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 1:50 pm

கழுகுகளின் காடு - சந்துரு; பக்.208; ரூ.240;  கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.

இந்தியாவில்  உள்ள 9 கழுகு இனங்களில் நான்கு இனங்கள் நீலகிரி - ஈரோட்டுக்கு இடையேயான மோயாறுப் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றன.   இவை குறித்து 20 ஆண்டுகளாக நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வு, பல்வேறு வகையான பயண அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.

வனம் பாதுகாக்கப்பட்டால்தான் உருவத்தில் பெரியதான வன விலங்குகள் பெருகும்.  இவ்விலங்குகள் இறக்கும்போது மாமிச உண்ணிகளான கழுகுகளின் எண்ணிக்கையும் பெருகும். ஆனால், இறந்த விலங்குகளை விஷமிடுவது, வனப்பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்பது குறைந்தது, அதிகமாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள், பழங்குடிகளை வனச் சூழலில் இருந்து அகற்றியது உள்ளிட்ட சில காரணங்களால் மோயாறுப் பள்ளத்தாக்கில் கழுகுகள் அறவே குறைந்தன என நூலாசிரியர் வருந்துகிறார்.

பழங்குடிகள், வன அலுவலர்கள், சர்வதேச கழுகு பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்டோருடன் நூலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வனம், வன உயிரினங்கள், பறவைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

கழுகுகள் குறித்த கள ஆய்வில் 100% சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை என்று நூலாசிரியர் பதிவு செய்திருப்பதிலிருந்து கள ஆய்வுப்பணி எத்தனை கடினமானது என்பதை உணர முடிகிறது.

புவி அனைத்து உயிர்களுக்கும் உரியது; மனிதனின் பேராசையால் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அதில் கழுகினமும் அடக்கம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.  வன ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.