தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தத் வ மஸி

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 1:48 pm

தத் வ மஸி சுவாமி ஐயப்பனின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் - கெளதம நீலாம்பரன், ஏபி. ரவிவர்மா, பெ. கஜபதி; பக். 320; ரூ.300; வ.உ.சி. நூலகம்,   சென்னை - 14; ✆ 98404 44841.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் பெரிய எழுத்துகளில் நம் கண்ணில் படும் வாசகம் 'தத்வமஸி'.  மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்கிற சப்தஜாலமிக்க  வாசகத்தின் பொருள்  'நீயே அதுவாக ஆகிறாய்'. அதாவது, 'நீ எதைத் தேடி வந்தாயோ அது நீயே' என்பதை விளக்குவதாக அமைந்திருக்கிறது. 

ஐயப்பனை நினைத்து விரதம் இருந்து உடலையும், மனதையும் கட்டுக்குள் வைக்கிறோம். அப்போது நம்மை எல்லோரும் 'சுவாமி' என்றும் 'ஐயப்பா' என்றும் அழைக்கிறார்கள். அப்போது 'நீ ஐயப்பனாகவே ஆகிறாய்'  என்பது தான் அதன் உள்பொதிந்திருக்கும் பொருளாக அறியப்படுகிறது.

கோயில், வரலாறு குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு புரிதலின் அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கின்றன  என்பதே இதன் சிறப்பு. அந்த வகையில் இந்த நூலாசிரியரும் அவருடைய புரிதலின் பாதையில் ஐயப்பனின் மகிமைகளை விளக்க, உணர்ந்துகொள்ள மேலும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது அருமை. 

விரத முறைகள் துவங்கி, அங்கு செல்லும் வழிகள் - வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள், ஐயப்பனின் ஆறுபடை வீடு (கால், இடுப்பு, வயிறு, பிறப்புறுப்பு, மனம், பிடரி, தலை) விவரங்கள் என அனைத்து விவரங்களையும் முழுவதுமாக ஆய்ந்து தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு.  விரதம் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வழிகாட்டியாக அமையும். 

இரைத்தேடலில் துவங்கும் வாழ்க்கையானது இறைத் தேடலில் நிறைவு பெறுகிறது. அந்த இறைத் தேடலில் வழிபாட்டு முறைகள் என்பது பாலமாக அமைகிறது. அதுபோன்றதொரு பாலத்தை அமைக்க  நூலாசிரியர் வழிகாட்டியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.