ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேக சூடாமணி - விளக்கவுரை - ஆச்சார்யா மணி; பக். 724; ரூ.900; அபயம் பப்ளிஷர்ஸ், கோவை 641015; ✆ 90956 05546.
உபநிஷதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் ஆகியவற்றுக்கு ஆதிசங்கரர் உரைகள் எழுதி என்றென்றும் உள்ள சனாதன தத்துவத்தை விளக்கினார்.
அதுவும் போதாது என்று, வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதற்கு அவர் எழுதிய பிரகரண (விளக்க) நூல்களில் விவேக சூடாமணி முக்கியமானது.
தத்துவத்தை பகுத்து அறிய உதவும் விளக்க நூல்களில் தலையாயது விவேகசூடாமணி.
உயிரினங்கள் மனிதப்பிறவி அடைவதும் அப்பிறவி ஞானத் தேடலில் ஈடுபட்டு முக்தியை நாடுவதும் மிக அரிது. முக்தி அடைய ஞானம் வேண்டும். அதற்கான சரியான குருவை அணுகி கேட்டறிந்து ஞானம் பெற வேண்டும்.
அவ்வாறு, சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கும் அமைப்பில் 580 ஸ்லோகங்களைக் கொண்டது இந்த நூல். கானல் நீர் பொய் என்று அறிந்தவர் அதை விட்டு விலகுகிறார். அறியாதவர் நீரை சுவைக்க அதை நாடி ஓடுகிறார். அஞ்ஞானம் பொய்யை மெய்யென காண வைக்கிறது. இதுபோன்ற அன்றாட நிகழ்வு உதாரணங்களுடன் குரு தனது மாணாக்கனுக்கு வேதாந்தத்தை விளக்குகிறார். இதற்கு எளிய தமிழில் விளக்க உரை அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
சம்ஸ்கிருத மூல ஸ்லோகங்களை சரியான உச்சரிப்புடன் படிக்க உதவும் வகையில் ஒலிக்குறிப்புகளுடன், பதவுரை அளித்து விளக்கம் அளித்துள்ளார். நல்ல முயற்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

