புத்தகம் என்னவெல்லாம் செய்யும்?
வாசிப்பு, எழுத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் இந்நூல் ஈர்க்கும்.

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - சோம.வள்ளியப்பன்; பக். 240; ரூ.260; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-4200 9603.
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி எழுத்தாளர்களுக்கும், வாசிப்பை நேசிப்போருக்கும் ஒரு வரப் பிரசாதம் என்றால் அது மிகையில்லை. தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் அதுவொரு முக்கியமான அத்தியாயமாகும். புத்தகக் கண்காட்சியில் தனது வாசகர்களுடனான நேரடி அனுபவத்தை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஒரு புத்தகத்திலிருந்து வாசகர்கள் என்ன மாதிரியான அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, வாசகர்களிடமிருந்து ஓர் எழுத்தாளர் என்ன பெற்றுக் கொள்கிறார் என்பதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருப்பது சுவாரஸ்யமாக்குகிறது.
கையெழுத்துப் பிரதி நடத்தியது, தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் நூலாசிரியரின் சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமானது; சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட நூலாசிரியரின் ஒவ்வோர் அனுபவமும் எழுத்தின் மீதான அவரது தீரா ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
கைலாசபுரம் இலக்கிய வட்ட நிகழ்வுகளுக்கு எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரை உரையாற்ற நூலாசிரியர் அழைத்து வந்தது முதல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தது வரையிலான நினைவுகளை சுவைபட விவரித்துள்ளார். ஒரு படைப்பாளராக தனது துறை சார்ந்து நூலாசிரியர் எழுதியிருக்கும் இதுபோன்றதொரு தனித்துவமான அனுபவத் தொகுப்பு வாசிப்புத் தளத்தில் புதுமையானதொரு முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...