தற்கால இலக்கியவியல்
இந்த நூலில் உள்ள முப்பது கட்டுரைகளும் படைப்பாளர்களின் படைப்புகளையும், அவர்களின் புலமையையும் வெளிப்படுத்துகின்றன.

தற்கால இலக்கியவியல் - தி.நெல்லையப்பன்; பக்.220; ரூ.340; மைன்ட் ரீடிங் பப்ளிகேஷன்ஸ், 1068, ஹெச்ஐஜி, டிஎன்ஹெச்பி காலனி, மதுரை- 625 011.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நூலாசிரியர், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு பாடநூல்களை எழுதியவர்.
இந்நூலின் 'வாய்மொழிக் கதைகள்' என்ற முதல் கட்டுரை, கூற கேட்பதைப் போன்றே கதை சொல்வதிலும் தமிழர்களுக்கு உள்ள ஈடுபாட்டை விவரிக்கிறது. ஆய்வாளர்களின் கருத்துகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், படைப்பாளிகளின் வகையும், கூறும் பொருண்மையையும் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
பெரியசாமிதூரன், அண்ணாதுரை, கருணாநிதி, அப்துல் ரகுமான், வாலி, கந்தர்வன், சூரியகாந்தன், இறையன்பு உள்ளிட்டவர்களின் படைப்புகளை ஆராய்ந்து வகைப்படுத்திய கட்டுரைகள் சிறப்பு.
'தமிழ்ப் புதுக்கவிதைகளில் சொற்பெருக்கப் பண்புகள்' கட்டுரையில், தொன்மை இலக்கியங்களில் சொற்கள் கலப்பு அதிகமில்லை. ஆனால், அதன் பின்பு வந்த காப்பியங்களிலும், நீதி இலக்கியங்களிலும் சொற்பெருக்கப் பண்புகள், கலப்புமொழி சொற்கள் அதிகமாகிவிட்டன. இவை சில நேரங்களில் மொழிக்கு வளம் சேர்ப்பவையாகவும் உள்ளன என்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் உள்ள முப்பது கட்டுரைகளும் படைப்பாளர்களின் படைப்புகளையும், அவர்களின் புலமையையும் வெளிப்படுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...