வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஊர் சுற்றும் விஞ்ஞானி

சிறிய, சிறிய கட்டுரைகளில் அறிவியல் மற்றும் அறம் சார்ந்த கருத்துகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 2:42 pm

DIN

ஊர் சுற்றும் விஞ்ஞானி - டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்- காவ்யா, சென்னை-24; ✆044-23726882.

ஆராய்ச்சியாளரான நூலாசிரியர் பயணங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். இதனால் ஏராளமான கிராமங்கள், நகரங்களுக்கு பயணம் செய்த அவர் பல்வேறு மக்களைச் சந்தித்து அதன் மூலம் தாம் பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். இதில் நாம் அன்றாடம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்,

கடினமான சூழல்களில் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திருநெல்வேலியின் சிறப்புகள், வரலாற்று நிகழ்வுகள் என பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சில விஷயங்கள் கதைகளாக விரிந்து அதன் முடிவில் நமக்கான பாடத்தைச் சொல்கிறது.

கரோனா தொற்று காலத்தில் அனைவரும் வீட்டுக்குள் அடைந்திருந்தனர். அப்போது பூ கட்டி விற்கும் உமா அக்கா தனது பழைய கைப்பேசியை விற்று விட்டு தொடு திறன் கொண்ட நவீன கைப்பேசியை வாங்கி, வாட்ஸ் ஆப், போன் பே போன்ற செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பூ விற்பனை செய்தார். இதனால் வருமானம் வந்ததால் அவரது குடும்பமும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இது பூ கட்டும் உமா அக்கா சொல்லிக் கொடுத்த பாடம் என்ற முதல் அத்தியாயத்தின் சுருக்கம்.

இதைப் போன்று, ஒரு கருவூலப் பொக்கிஷம், காடு நம்மைக் காக்கும் அரண், அமெரிக்கா படுத்திய பாடு, அன்று ஞாயிற்றுக்கிழமை, செயற்கைக் கருத்தரிப்பில் உள்ள சிக்கல்களில் ஒன்று என மொத்தம் 73 அத்தியாயங்களில் நமது அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் அறிவியல், பயணங்கள் கொடுக்கும் அனுபவம், புகழ் பெற்ற இடங்களைப் பார்க்க வேண்டியதன் அவசியம் என பல்வேறு விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சிறிய, சிறிய கட்டுரைகளில் அறிவியல் மற்றும் அறம் சார்ந்த கருத்துகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.