பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

எத்தனால் தொழில்நுட்பமும், அதன் புரட்சியும்

News image
Updated On :22 ஜனவரி 2024, 1:15 pm

எத்தனால் தொழில்நுட்பமும், அதன் புரட்சியும் - முனைவர் ரவி சீனிவாசன்; பக்.370; ரூ.500; கொங்கு மண்டல ஆய்வு மையம், உடுமலைப் பேட்டை, ✆ 94988 64562; 

சர்க்கரையை நொதிக்கச் செய்தும், பெட்ரோ வேதியியல் முறையிலும் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் எனும் வேதிப் பொருளை விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள உதவுகிறது இந்நூல்.

போதை பானங்களுக்கான சேர்மமாக பரவலாக அறியப்பட்ட எத்தனால், மனித சமூகத்துக்கு பல நேரங்களில் ஆக்கபூர்வமாக பயன்படுகிறது என்ற உண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினியாக மட்டுமல்லாது வைரஸ், பூஞ்சைகளை அழிக்கும் அருமருந்தாகவும், எரிபொருளாகவும் உள்ள அந்த வேதிப் பொருளின் அனைத்து ரசாயன மாற்றங்களையும் விரிவாகக் கூறியிருக்
கிறார் நூலாசிரியர்.

எத்தனால் எப்படி உருவாக்கப்படுகிறது, அதற்கான நுட்பங்கள் என்னென்ன, அதிலுள்ள சவால்கள், வேதி மாற்றங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், சந்தை மதிப்பு, சர்வதேச அரசியல் என அனைத்து விஷயங்களும் அலசப்பட்டுள்ளன.

வேதி சமன்பாடுகளும்,  மூலக்கூறு வாய்ப்பாடுகளும் அநேக பக்கங்களை ஆக்கிரமித்திருந்தாலும், அவை யாவும் இந்நூலுக்கு அச்சாரமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

வேதியியல் மற்றும் ரசாயன நுட்பங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், மாணவர்களுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் இந்நூல் சிறந்த கையேடாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.