எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்

News image
Updated On :1 ஜூலை 2024, 7:07 pm IST

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் - முனைவர் ஜெ.ராஜா முகமது; பக்.262; ரூ.120; ஜமால் முகமது கல்லூரி, திருச்சி- 620 020; ✆0431- 2331135.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவுக்குப் பங்கேற்றுள்ளனர் என்பதை தெள்ளத் தெளிவாக, உரிய ஆதாரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

1857-க்கு முற்பட்ட ஆண்டுகளிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் பாளையக்காரர் புரட்சி, வேலூர் புரட்சி உள்ளிட்ட போராட்டங்களில் தமிழக முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் நூலாசிரியர் முன்வைக்கிறார்.

தமிழக முஸ்லிம்களின் குறித்த அறிமுகத்தோடு தொடங்குகிறது நூல். 1857-க்கு முந்தைய கிளர்ச்சி, 1857-ஆம் ஆண்டு எழுச்சியில் தமிழக முஸ்லிம்கள், தேசிய அரசியலும் தமிழக

முஸ்லிம்களும், கிலாபத் - ஒத்துழையாமை இயக்கங்களும் தமிழக முஸ்லிம்களும், தேசிய நீரோட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் (1923-1930), சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழக முஸ்லிம்கள்,

தமிழக அரசியல் களத்தில் தமிழக முஸ்லிம்கள் (1930-1947), "இந்தியாவை விட்டு வெளியேறு' இயக்கம், அரசியல் எழுச்சியும் முஸ்லிம் பத்திரிகைகளும், ஆனந்த சுதந்திரம் அடைந்து

விட்டோமே உள்ளிட்ட 12 கட்டுரைகள் முஸ்லிம்களின் பங்களிப்பை விவரித்துள்ளன.

மேற்கோள்கள், ஆவணங்கள், துணை நின்ற நூல்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக முஸ்லிம்களின் விவரங்கள் போன்றவையும் இணைக்கப்பட்டிருப்பது, மேலும் தகவல்களை அறிய விரும்புவோருக்கு வழிகாட்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது என்பது வாசித்து முடிக்கும்போது, புலப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.