சிந்துவெளி செந்தமிழ் - சந்திரசேகரன்; பக்.313; ரூ.280; நியூ சென்னை பப்ளிகேஷன்ஸ், 16/22 ஜவாஹர்லால் நேரு தெரு, நியூ பெருங்களத்தூர், சென்னை-63.
சிந்து வரிவம் (வடிவம் அல்ல என்கிறார் நூலாசிரியர்) இப்பகுதியில் காலப்போக்கில் தோன்றி, பல பரிணாமங்களைக் கடந்து வளர்ச்சி அடைந்த வரிவம் அல்ல என்றும், ஏதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஏதோ ஓர் குழுவினர் ஒன்றுகூடி விவாதித்து உருவாக்கிய வரிவம் என்பது தனது கருத்து என்கிறார் நூலாசிரியர்.
இந்த ஏதோ ஒரு குழுவினர் வசித்த அவர்களது காலத்தில் எகிப்து, சுமேரியா பகுதிகளில் கோலோச்சி கொண்டிருந்த வெட்டெழுத்து ஆப்பெழுத்து (கூனிபார்ம்) ஆகியவற்றை மாதிரியாகக் கொண்டு ஓர் எழுத்து வரிவத்தை உருவாக்கினார்கள். ஆனால், வெட்டெழுத்திலிருந்தோ, ஆப்பெழுத்திலிருந்தோ குறியீடுகளை எடுத்துக் கொள்ளவில்லை. புதிது, புதிதான குறியீடுகளைத் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறும் நூலாசிரியர் தங்களுக்கு முன் இருந்த வெட்டெழுத்து, ஆப்பெழுத்து வரிவங்களில் அமைப்பு முறையிலான ஒழுங்கை தாங்களும் கைகொண்டனர். அதன் செயல்பாடுகளை சிந்து வரிவத்தில் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறும் நூலாசிரியர், எகிப்திய வெட்டெழுத்தும் உயிரெழுத்து
களைத் தவிர்த்து மெய் எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் படத்துக்கும் முதலிடம் தந்தனர் என்றும் கூறுகிறார். சிந்து வரிவத்தில் எழுதும் முறை பெரும்பாலும் வலமிருந்து இடமாகவே அமைந்திருந்தது என்றும் சிற்சில இடங்களில் இடமிருந்து வலமாகவும் எழுதும் முறையும் இருந்தது என்றும் கூறுகிறார்.
சிந்து வரிவத்தில் இ.எ.- உ, ஞ- ட, ற போன்றவற்றை குறிக்கத் தனித்தனியாக ஒரே குறிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறுகிறார்.
நூலில் பெரும்பாலும் குறிகள், படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை எப்படி நூலாக உருவாக்கினார்கள் (கம்போஸ்) செய்தார்கள் என்பது ஆச்சரியம்தான். குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

சென்னை சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. பெயர்!

இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

டாடா மோட்டார்ஸ் ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...