கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

DIN

பசும்பொன் பதித்த சுவடுகள் - இராசா அருண்மொழி; பக்.128; ரூ.140; காவ்யா, சென்னை-24; ✆ 98404 80232.

தென் மாவட்ட மக்களால் கடவுளாக வழிபடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. அவர் மறைந்து

அறுபது ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்கிறார் நூலாசிரியர்.

பார்வர்டு பிளாக் கட்சியின் தோற்றத்திலிருந்தாலும் இடதுசாரி சிந்தனையாளர், ஆன்மிகப் பேரொளி, கொடைவள்ளல், தேசியவாதி, தமிழ்ப் பற்றாளர்.. என்று அவரை வர்ணிக்கும் நூலாசிரியர், தேவர் தனது கடைசிக்காலத்தில், 'மனிதனின் யோக்கியதையை நிர்ணயிப்பது பணம், பெண், அதிகாரத்தின் மீது ஒருவன் பூண்டுள்ள நிலைப்பாடு; அம்மூன்றுமே தனக்குத் துச்சம்' என்று கூறியதை எடுத்தியம்புகிறார்.

தேவரின் வரலாற்றோடு, நேதாஜி, காமராஜர், சைதன்யர், சிவாஜி கணேசன் போன்றோருடனான அவரது நட்பு, மக்கள் பணி, தேர்தல் களம் போன்றவற்றை அதற்குரிய அரிய புகைப்படங்களோடு நூலாசிரியர் விவரித்துள்ளார்.

தேவர் குறித்து அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிப்பிட்டதையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சன்மார்க்கம், குற்றப் பரம்பரைச் சட்டம் போன்றவை குறித்த விளக்கமும் சிறப்பு. 'விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் - வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்' என்ற தேவரின் கோட்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். அவருக்கு சொந்தமான 32 கிராமங்களின் பட்டியல் வியக்கவைக்கிறது. தேவர் ஜெயந்தி, குரு பூஜைகளையும் பதிவு செய்து நூலை நிறைவு செய்துள்ளார்.

'தேர்தல் களத்தில் வாக்கு கேட்டுச் சென்றதில்லை; தோல்வியையும் தழுவியதில்லை' என்ற தேவரின் வாழ்க்கையைத் தமிழர்கள் அனைவரும் அறிவது அவசியமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.