ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

DIN

கருப்பு சிவப்பு காவி! - ரங்கராஜ் பாண்டே; பக்கம்: 160; ரூ.200; கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை - 600 014; ✆044-4200 9603.

இதழியல் துறையில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட நூலாசிரியர், சமீப காலத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

ஹிந்து தர்மம், அதன் மீதான விமர்சனங்கள், சந்தேகங்கள், முரண்பாடுகள் குறித்து பேச்சாளர் துஷ்யந்த் ஸ்ரீதருடனான நூலாசிரியரின் கலந்துரையாடல், அனைத்து மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. ஏக இறைவனை ஏகப்பட்ட வடிவங்களில் வணங்குவதுதான் சநாதன தர்மம் என்று குறிப்பிடும் துஷ்யந்த் ஸ்ரீதர், அதை விளக்கும் விதமாக மெண்டலீவின் பீரியாடிக் டேபிளை மேற்கோள் காட்டியிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

திருவள்ளுவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை குறளின் அடிப்படையில் வியத்தகு வகையில் நிறுவி, வள்ளுவரை காவி உடைக்குள் குறுக்குவது தவறு என்றும், அதே நேரம் வள்ளுவருக்கு காவி அணிவிக்கக்கூடாது என்று சொல்வது அதைவிடப் பெரிய தவறு என்றும் தனது வாதத்தை வெகு நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் நூலாசிரியரின் குறள் குறித்த பார்வை பாராட்டுக்குரியது.

பிராமணர்கள் யார்?, அயோத்தி தீர்ப்பு, ஆதிக்க சாதி, கலப்பு திருமணம், கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனம் உள்ளிட்ட சம காலத்தில் கவனம் ஈர்த்த பிரச்னைகளை அதனதன்

பின்னணியுடன் ஆராய்ந்து, அவற்றை எப்படி கையாண்டிருக்க வேண்டும், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் இந்நூலில் அலசப்பட்டிருக்கிறது.

இந்நூல் ஒவ்வொரு ஹிந்துவும், ஹிந்து மதம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோரும் மட்டுமல்லாது அனைவராலும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.