ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

DIN

லா.ச.ரா. முத்திரைக் கதைகள் ஆய்வும் தொகுப்பும்; ஆ.பூமிச்செல்வம்; பக்.176; ரூ.150; செல்லப்பா பதிப்பகம், மதுரை 625001; ✆ 94860 09826.

தமிழ் இலக்கியத்தில் தனக்கென தனித்தடம் அமைத்து தேரோட்டியவர் லா.ச.ராமாமிருதம். உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியவற்றில் பரிசோதனைகள் மேற்கொண்டு பெரும் வெற்றி பெற்று காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகளைப் படைத்துள்ளார் லா.ச.ரா. அவருடைய தேர்ந்தெடுத்த 15 கதைகளைக் கொண்ட தொகுப்புதான் இந்த புத்தகம்.

கதை மாந்தர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, அவை கதை சந்தர்ப்பங்களில் எழும் வேகம் ஆகியவற்றை நுட்பமாக எழுத்தில் தத்ரூபமாக வடித்தவர் லா.ச.ரா. தமிழ் உரைநடையில் நாம் எதிர்பாராத சொல் வீச்சு, கதைக் கருவில் புதுமை, எண்ண ஓட்டங்களை வடிக்கும் மொழி வளைவுகள் லா.ச.ரா. எழுத்தின் சிறப்பு.

லா.ச.ரா. குறித்து மனதின் அடியாழத்தில் அமிழ்ந்து போயிருக்கிற நன்நினைவுகளை மீட்டெடுப்பதாகவும், அந்நினைவுகளை மீள அனுபவிக்கிற ஆழ்மன எழுச்சியின் விளைவாகவுமே அவரின் கதைகள் அடங்கிய இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை.

இதில் பச்சைக் கனவு, பிராயச்சித்தம், பேசும் விரல் உள்ளிட்ட அவருடைய 15 சிறப்பான கதைகள் உள்ளபோதிலும், அவருடைய மிகப் பிரபலமான "பாற்கடல்' போன்ற கதைகள் இடம் பெறவில்லை. இருந்தபோதிலும் இவையும் லா.ச.ரா.வின் இலக்கிய ஆழத்தை உணர்த்தும் முத்திரைக் கதைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

லா.ச.ரா. படிப்பதற்கு கடினமானவர் என்று யாராவது சொல்லிவிடுவார்களேயானால், அப்படியில்லை என்று கூறுபவை இந்தப் பதினைந்து கதைகள். முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இவை முதல் வாசிப்பிலேயே நம்மைக் கவர்வதாகவும் யதார்த்த மொழி ஆளுகையைக் கொண்டதுமாக உள்ளன. இந்தத் தொகுப்பு லா.ச.ரா. கதை உலகத்துக்கான சிறந்த நுழைவாயில் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.