எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பெளத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்

பெளத்த முன்னோடிகளை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான சிறந்த கையேடு.

News image
Updated On :11 நவம்பர் 2024, 1:35 pm

DIN

பெளத்த மறுமலர்ச்சி முன்னோடிகள் - முனைவர் க. ஜெயபாலன்; பக். 230; ரூ.300; பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை -21; ✆ 98847 44460.

எந்திரமயமாகி பொருள் தேடி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் மக்கள், இன்னொரு புறம் தியானம், யோகம் என்று அமைதியைத் தேடிச் செல்லவும் நேர்ந்கிறது.

சாதி, மதம், மொழி, நாடு போன்ற அனைத்து வரையறைகளையும் கடந்து மனித குலத்தின் விடுதலைக்குரிய ஒன்றாக பெளத்தம் பேசப்படுகிறது.

பெளத்தத்தைப் படிக்கும்போதே அதைத் தொடர்ந்த, முன்னெடுத்த, பரப்பிய தமிழக, இந்திய, உலகளாவிய ஞானிகளை, அறிஞர்களை பெரும்பாலும் இன்னமும் பரவலாக அறியப்படாதவர்கள் நூறு பேரைப் பற்றிய அறிமுகத்தையும் சுருக்கமான வரலாற்றையும் தருகிறது இந்த நூல்.

தமிழில் பெளத்தம் என்றதுமே தோன்றுகிற பண்டிதர் அயோத்திதாசரில் தொடங்கி, பெளத்தத்தைப் பரப்பியவர்கள், எழுதியவர்கள், பேசியவர்கள் எல்லோரும் இங்கே இடம் பெற்றிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, பெளத்தத்தின் மேன்மைகளை மிக நேர்மையாக எடுத்துரைத்த ப. ராமஸ்வாமி பற்றியும்கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்காரவேலர், இரட்டைமலை சீனிவாசனார், துறவி பரம சாந்தி தேரோ வரையிலும் இடம்பெற்றுள்ள நூலில், பாரதிதாசன் எவ்வாறு தம் பாடல்களில் பெளத்த கருத்துகளை முன்வைத்துள்ளார் என்பதுகூட விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் ராகுல சாங்கிருத்தியாயனிலிருந்து கேரளத்தின் பண்டிட் கருப்பன் வரையிலும் உலகளவில் பெளத்த அறிவாளர்களைப் பட்டியலிடும்போது, சித்தார்த்தா எழுதிய ஹெர்மன் ஹெஸ்úஸ, சீன எழுத்தாளர் லூசுன் போன்றோர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆசிரியர் தொகுத்துள்ள மேலும் 140 பேர் பற்றிய தகவல்களும் நூல் வடிவம் பெற்றால் சிறப்பு. பெளத்த முன்னோடிகளை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான சிறந்த கையேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.