பழமொழிகளில் அறிவியலின் பன்முகங்கள்
பழமொழிகள் நூல்கள் என்று சொல்லவதைவிட, பல்துறைகளில் பொது அறிவுத் தகவல்களை அள்ளித் தரும் பொக்கிஷமாகவே இந்த நூல் விளங்குகிறது.

பழமொழிகளில் அறிவியலின் பன்முகங்கள் - உ.தாமரைச்செல்வி; பக்.174; ரூ.200; ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-42; ✆ 99400 56332.
உடனிருப்போர் தவறு செய்யும்போது, அவர்களுக்கு பல மணி நேரம் சொல்லி புரியவைப்பதற்குப் பதில், ஒற்றை பழமொழியைச் சுட்டிக் காட்டி சொல்வோர் உண்டு. இந்தச் சிறப்புமிக்க பழமொழிகளில், தற்போதும் வழக்கில் இருக்கும் பழமொழிகளுக்கு சரியான அர்த்தங்கள் சொல்வோருக்கும் தெரிவதில்லை. நாளடைவில் மருவி வெவ்வெறு அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், பழமொழிகளில் பொதிந்துள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை அறியும் நோக்கில், நூலாசிரியர் முயற்சி பாராட்டத்தக்கது.
சொல்வழக்கில் இருக்கிற பல நூறு பழமொழிகளை வானியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவ இயல் பறவை இயல், மனித உடலியக்கவியல், மரபியல், மகப்பேறியல், தாய்ப்பாசம், குடும்பக் கட்டுப்பாடு, சூழ்நிலை இயல், உளவியல், உழவியல், கட்டடக் கலையியல், தடயஇயல் அறிவியல், தட்ப வெப்ப இயல், தொல்லியல், ஒரு பழமொழியில் இரு முகங்கள், ஒரு பழமொழியின் முப்பரிமாணம் என்று 21 வகைகளாகப் பிரித்து, பழமொழிகளை ஆய்ந்து எளிய தமிழில் நல்லதொரு விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர்.
இதுதவிர, மேலும் விவரங்களை அறிய விரும்புவோருக்காக துணை நின்ற நூல்கள் பட்டியல் சேர்த்திருப்பதும் சிறப்பு. பழமொழி சொல்வோர் மட்டுமல்ல; அனைத்துத் தரப்பினரும் படித்தறிய வேண்டிய எண்ணற்ற தகவல்கள் நிறைந்துள்ளன. பல பழமொழிகள் சிரிக்க வைத்தாலும், சிந்திக்கவும் வைக்கின்றன. பழமொழிகள் நூல்கள் என்று சொல்லவதைவிட, பல்துறைகளில் பொது அறிவுத் தகவல்களை அள்ளித் தரும் பொக்கிஷமாகவே இந்த நூல் விளங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...