வைகறை வாசகன் பதிவுகள் - டாக்டர் சங்கர சரவணன்; பக்.352; ரூ.375; விகடன் பிரசுரம்; சென்னை - 02; ✆95000 68144.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநராக உள்ள டாக்டர் சங்கர சரவணன் முகநூலிலும் பொது அறிவுப் புத்தகத்திலும் எழுதிய தகவல்களின் தொகுப்பு இந்நூல்.
இதில் பல்வேறு இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், திரைத்துறையினர், மாணவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை 118 குறுங்கட்டுரைகளாக நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார்.
கவனத்துக்குரிய கலைச்சொற்கள் எனும் தலைப்பில் நவீன அறிவியல் சொற்களுக்கு தமிழ் விளக்கத்தை தந்துள்ளார். அதே நேரத்தில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் வாசிப்பின் வாசல்கள் விளங்குகின்றன. குறிப்பாக, பல இலக்கண குறிப்புகளை மக்களுக்கு புரியும் வகையில் பேச்சுமொழியில் கூறியிருப்பது சிறப்பு.
இலக்கியம் மட்டுமல்லாமல் திரைத்துறையில் ஏற்படும் பல்வேறு மாறுபாடுகள், இயக்குநர்களின் சிறந்த படைப்புகளை நூலாசிரியர் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
தொல்காப்பியம் முதல் பின்நவீனத்துவம் வரை பல்வேறு தகவல்களை கொண்டு இந்நூல் விளங்குகிறது. இத்தனை தகவல்களை இளம் தலைமுறையினரின் வசதிக்கேற்ப குறுகத் திரித்த கட்டுரைகளாகக் கொடுத்திருப்பது தனிச்சிறப்பு.
வாசிப்பின் முக்கியத்துவம், போட்டித் தேர்வர்களுக்கான ஆலோசனை, அறிவை விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம், படித்து பயன்பெற வேண்டிய நூல்கள் என பொது அறிவை விரிவுபடுத்தத் தேவையான பல தகவல்களைக் கொண்டிருக்கும் பல்சுவை கதம்பம் இந்நூல்.
இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...