மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 4)

பழங்காலம் என்பது வெறும் கடந்த காலம் மட்டுமல்ல; அது நினைவுகளின் தொகுப்பு.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 12:04 pm

DIN

அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 4) - அரவிந்த் சுவாமிநாதன்; பக். 154; ரூ.190; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 8148066645.

பழங்காலம் என்பது வெறும் கடந்த காலம் மட்டுமல்ல; அது நினைவுகளின் தொகுப்பு. வரலாற்றின் ஆதாரம்.

தபிதா பாபு என்பவர் ஆசிரியராக இருந்து, 1865-இல் சென்னையில் இருந்து வெளியான 'அமிர்தவசனி' இதழ்தான் தமிழின் முதல் பெண் இதழ், அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் ஹிந்துக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகளையே அதிகம் வெளியிட்டதும், பெண் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்ததும் ஆச்சரியமூட்டுகிறது.

அதேபோல 1883 முதல் 1945 வரை வெளிவந்த பெண் இதழ்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எப்படி?' என்பது குறித்து வெளியான 'மதிமோசக் களஞ்சியம்' என்ற நூலில், 249 ஏமாற்றுத் தந்திரங்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் உள்ளதுபடி இன்றைக்கும் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

ஊதாரித்தனமாக செலவு செய்து அழிந்துபோனவர் குறித்து 'டம்பாசாரி விலாசம்' என்ற நூல் வெளியானது. அது பின்பு நாடகமாக மேடையேறி, சினிமாவாகவும் வெளிவந்து வெற்றிபெற்றது.

'ராயப்பேட்டையில் அயோத்திதாஸ் பண்டிதர் என்பவர் தேள், பாம்பு கடிகளுக்கு மருந்து கொடுக்காமல் புன்னகை புரிந்தபடி தனது தலையை சொரிந்தபடி நோயாளியைப் பார்ப்பார். உடனே விஷ முறிவு எற்பட்டு குணமாகிவிடும்' என்ற அரிய தகவல் 'உள்ளொளி' என்னும் இதழில் பதிவாகியுள்ளதைப் படிக்கும்போது, மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக இருக்கிறது.

45 தலைப்புகளில் பதிவாகியுள்ள ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு நினைவுகளை நம் கண் முன் கொண்டு வந்து சிலிர்ப்பூட்டுகிறது.

இளம்தலைமுறையினருக்கு படம்பிடித்துக் காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளதால், எழுத்துலக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.