மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கியங்கள் குறித்து அறிய விரும்புவோருக்கு உற்றதொரு வழிகாட்டி நூல் இது.

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 8:46 am

DIN

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - (பதிப்பாசிரியர்) ப. முருகன்; பக். 644; ரூ.230; தமிழ்த் துறை, டி.ஜி.வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106.

பழம்பெருமை வாய்ந்த தமிழில் சங்க, பக்தி, நீதி இலக்கியங்கள், காப்பியங்கள் தொடங்கி சமகால ஊடக இலக்கியங்கள் வரை தனித்தனி நூல்களாகப் படித்து அறிவது மிகக் கடினமான முயற்சி ஆகும். தேனடைகளைப் பிழிந்து கோப்பைகளில் தேனாகத் தருவதுபோல, அந்த நூல்களில் உள்ள கருத்துகள், செய்திகள், அவை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றைப் பகுத்தும் தொகுத்தும் தருவதே இலக்கிய வரலாற்று நூல்கள்.

காலத்தின் தேவைக்கேற்ப தமிழில் ஏற்கெனவே அறிஞர்கள் பலராலும் இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன; எழுதப்படுகின்றன. அவற்றில், ஒன்றில் சொல்லப்படாத செய்திகள் மற்றொன்றில் இருக்கும். அந்த வகையில் 'பொருண்மை நோக்கில்' என்ற கோணத்தில் இலக்கிய வரலாற்றைத் தொகுத்தளிக்கிறது இந்த நூல்.

தமிழ் இலக்கியங்கள் சார்ந்து பல்வேறு துறைகள் குறித்த அறிமுகத்தையும் இலக்கிய வரலாற்று நூல்கள் பலவற்றிலும் கூறப்படாத அரிய செய்திகளையும் வினா- விடைகளோடு இணைத்து வழங்கியிருப்பது கூடுதல் சிறப்பாகவும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

கணினித் தமிழ், அயலகத் தமிழ் என இப்போதுவரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளையும் விடுபடாமல் எடுத்துரைப்பது பாராட்டத்தக்கது. மாணவர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு ஆவணம். தமிழ் இலக்கியங்கள் குறித்து அறிய விரும்புவோருக்கு உற்றதொரு வழிகாட்டி நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.