கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்

சங்க இலக்கியங்களில் காணப்படும் உவமை, உருவகம் போன்றவை சித்தர் படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :9 மார்ச் 2026, 7:18 am

தினமணி செய்திச் சேவை

செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்-முனைவர் கோ.வெங்கடேசன்; பக்.256; ரூ.320; வைரமுல்லை பப்ளிஷர்ஸ், தஞ்சாவூர்-613 007, ✆ 97905 79163.

தமிழர்களின் பண்பாட்டு முதிர்ச்சியை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை சங்க இலக்கியங்கள் என்றால், தமிழ் மெய்யியல் மரபு குறித்த புரிதலுக்கு சித்தர் இலக்கியங்கள் பயன்படுகின்றன. சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்களை ஒப்பிட்டு அவை கூறும் கருத்துகள் இந்த நூலில் நயம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இல்லறத்தில் இருந்து கொண்டே அறவழியில் வாழ்ந்து பொருளீட்டி அளவோடு இன்பம் துய்த்து வீடுபேறு அடையலாம் என்பதற்கான வழிமுறைகளை சங்க இலக்கியமும், சித்தர்கள் படைப்புகளும் கூறுவதை சங்கப் பாடல்கள், சித்தர் பாடல்களுடன் ஒப்புமைப்படுத்தி ஆய்வு நோக்கில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.

நிலையாமையைப் பாடி வீடுபேற்றை அடையும் வழியை சங்கப் புலவர்கள் வலியுறுத்தினார்கள்; 'தானே தன்னை அறிதல்' என்ற உண்மை நிலையை சித்தர்கள் தங்கள் படைப்புகள் வாயிலாக உணர்த்துகின்றனர். சங்க இலக்கியங்கள், சித்தர் படைப்புகளில் நிலையாமைத் தத்துவங்கள் பாடப்பட்டதன் நோக்கம் மக்கள் நற்கதி அடையவும், பிறவிக் கடலை நீந்தவும், பிறவா நிலையை அடையவும் உதவும் என்பது தெரிய வருகிறது.

சங்க இலக்கியங்களில் காணப்படும் உவமை, உருவகம் போன்றவை சித்தர் படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. இலக்கண மரபுகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. மக்களின் மனதைப் பண்படுத்த, நல்வழிப்படுத்தும் கருத்துகளையே சங்க இலக்கியங்களும், சித்தர் படைப்புகளும் வலியுறுத்துகின்றன என்பது தெளிவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.