கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவை உலுக்கிய கிரைம் வழக்குகள்

ஒவ்வொரு கிரைம் வழக்கையும் தெளிவான நடையில் இந்நூல் படம் பிடித்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 1:32 pm

DIN

இந்தியாவை உலுக்கிய கிரைம் வழக்குகள் - ப.சரவணன்; பக். 168; ரூ.210; சுவாசம் பதிப்பகம், சென்னை - 27; ✆ 81480 66645.

இந்திய அளவில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், காவல் துறை, பொதுமக்களை உலுக்கிய 15 கிரைம் வழக்குகளின் முழு விவரங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். 9 நாள்களுக்குப் பிறகு குற்றவாளிகள் நால்வரும் போலீஸôரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு; ஜூனைத் கான் கொலை வழக்கு; காம்துனி கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு; நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் தேசத்தையே அதிரச் செய்த 15 குற்ற வழக்குகளை இந்நூல் அலசி ஆராய்கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை, குற்றத்தின் பின்னணி, வழக்கு சார்ந்த சட்ட விதிகள், குற்றவாளிகளின் விவரம், தேசிய அளவில் எழுந்த விமர்சனங்கள், குற்றம் நிகழ்ந்தது முதல் தீர்ப்பு வரை காலவரிசையிலான தகவல்கள், தீர்ப்பின் விவரம், பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், வழக்குகளின் தற்போதைய நிலை என ஒவ்வொரு கிரைம் வழக்கையும் தெளிவான நடையில் இந்நூல் படம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.