தி.க.சி. திறனாய்வுக் களஞ்சியம்
தி.க.சி. என்றால் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர் என்பது அவரின் முக்கிய அடையாளம்.

தி.க.சி. திறனாய்வுக் களஞ்சியம் - கழனியூரன்; பக். 919; ரூ. 950; காவ்யா பதிப்பகம், சென்னை-24 ; ✆ 044-2372 6882.
தி.க.சி. என்றால் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர் என்பது அவரின் முக்கிய அடையாளம். அவரின் திறனாய்வானது சமரசம் செய்யாத விமர்சனங்களை உள்ளடக்கியது என்று இந்த தொகுப்பை வாசிக்கும் போது தெரிகிறது.
பாரதியின் படைப்புகளை தனது முக்கியமான அளவுகோலாக வைத்துள்ளார் தி.க.சி. கவிதைகளோ, சிறுகதைகளோ, நாவல்களோ எதுவாயினும் பாரதியின் படைப்புகளையே முன்னிறுத்துகிறார்.
1930- ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புசத்தியாகிரகத்துக்குப் பின் தமிழில் பத்திரிகைகள் பெருகியதாகப் பதிவுசெய்கிற தி.க.சி., அப்பத்திரிகைகள் பாரதியைப் பின்பற்றாமலும், மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய தலைவர்களைச் சேர்க்காமல் விட்டதும்தான் இன்றைய தேசப்பற்றின்மைக்கு காரணம் என அறச்சீற்றம் கொள்கிறார். இலக்கியம் என்பது கலைநயம், மனிதநேயம், சமூகநீதி மூன்றும் பின்னிப்பிணைந்திருத்தல் அவசியம் என்பதே தி.க.சி.யின் கருத்து.
தமிழ் இலக்கிய உலகின் ஆரம்பம், கவிதை, சிறுகதை மற்றும் நாவல் இலக்கியத்தின் தோற்றமும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும் அதன் விளைவுகளும் இந்நூலில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் இத்தொகுப்பில் படைப்பாளர்களும் அவர்களது படைப்புகளும் தி.க.சி. யின் பார்வையில் தரவரிசை செய்யப்பட்டுள்ளன.
மணிக்கொடி காலம் முதல் தற்போதுவரை படைப்பாளர்கள் படைத்தவை. அவர்கள் படைக்கத் தவறியவை குறித்த ஒரு முக்கிய ஆவணமாக இந்நூல் திகழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...