சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாஞ்சில் நாட்டு உணவு

இந்நூல் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 1:06 pm

DIN

நாஞ்சில் நாட்டு உணவு - நாஞ்சில் நாடன்;பக் 504; ரூ.590; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; ✆ 04652 - 278525.

உணவு என்பது பசி சார்ந்ததோ, ருசி சார்ந்ததோ மட்டுமல்ல, அது நம் வாழ்க்கைச் சூழல் மற்றும் இயற்கை சூழல் சார்ந்தது என்று ஓர் உணர்வுபூர்வமான செய்தியை நம்மிடையே ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.

இப்புத்தகத்தின் தலைப்பைப் பார்க்கும் போது ஏதோ ஓர் சமையல் குறிப்பு புத்தகமோ இது என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் புத்தகத்தை நாம் வாசிக்கும்போதுதான் ஆசிரியரின் பெரும்முயற்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு பலகாரம், அதன் வகைகள், அதன் செய்முறைகள் மட்டுமல்லாது, எந்த மாதத்தில் எந்த நாளில் அதைச் செய்து உண்பார்கள் என்கிற தகவலும் நமக்குக் கிடைக்கிறது.

அது மட்டுமல்லாமல், அந்த பலகாரத்தைப் பற்றி தமிழரின் சங்கப்பாடல்களில் வரும் குறிப்புகளும் இத்தொகுப்பில் நமக்குக் கிடைக்கின்றன. பாரம்பரிய உணவின் பக்கம் நாம் ஈர்க்கப்படுகிறோம். பானம், கஞ்சி, சோறு, எண்ணெய்ப் பலகாரங்கள், துவையல், பச்சடி, கிச்சடி, அவித்துத் தின்பவை, பச்சையாகத் தின்பவை, வறுத்துத் தின்பவை, வற்றல், மாமிச உணவுகள் என நாஞ்சில் நாட்டு பகுதிகளில் உண்ணப்படும் பல்வேறு உணவுகளைப் பற்றிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நூலாசிரியர் சுவை பார்த்த சோற்றுக்கற்றாழை ஊறுகாய், கடுகுக் கீரை கூட்டு நம்மை ஈர்க்கின்றன.

இந்நூல் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. நம் மூதாதையர்கள் வைத்திருந்ததை எதிர்காலத்திற்கு கடத்துவதே நூலின் நோக்கம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.