வ.உ.சி.- ப.சரவணன்; பக்.184; ரூ.220; சுவாசம் பதிப்பகம், சென்னை-600127; ✆ 81480 66645.
முதல் அத்தியாயத்திலேயே வ.உ.சி. மிதவாதியா, தீவிரவாதியா எனக் கேள்வி எழுப்பி, அவர் மிதவாதியோ, தீவிரவாதியோ அல்லர், அவர் இந்திய விடுதலைக்காக புதுப்பாதை அமைத்துப் போராடியவர் என்று பதில் கூறுகிறார் நூலாசிரியர்.
தமிழ் இலக்கியங்களில் கப்பல் மூலம் வணிகம் செய்தது, போர்களை நடத்தியது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அதே வழியைத்தான் எதிரிகளான வெள்ளையர்களுக்கு எதிராக வ.உ.சி. மேற்கொண்டார். வணிகத்துக்காக இந்தியா வந்தவர்களை வணிகம் மூலமே விரட்டியடிக்க முயன்றதுதான் அவரின் புதுப்பாதை.
ம.பொ.சி.தான் இவரை "கப்பலோட்டிய தமிழர்' என்று அழைத்தவர். ஆனால், அதற்குப் பின்னால் வ.உ.சி.யின் தேச பக்தியும், சுதந்திர வேட்கையும், நாட்டு மக்கள் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் இருந்தது. 1900 - களில் ரூ.10 லட்சத்துக்கு கப்பல் வாங்கி வணிகம் செய்வது என்றால் அது எளிதான செயலில்லை. ஒரு பங்கின் விலை ரூ.25 என்று 40 ஆயிரம் பங்குகளை விற்று கப்பல் வாங்கி வணிகம் செய்தார். வெள்ளையர்கள் இந்த வணிகத்தை அழிக்க நிறைய முயற்சி செய்தார்கள்.
அவரின் கப்பல் வணிகத்தை ஆங்கிலேயர் சரிவடையச் செய்தாலும், வ.உ.சி.யின் வணிகத்தால் ஆங்கில அரசுக்கு ரூ.96 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்த வருவாய் இந்திய மக்களுக்குத்தானே என்று வ.உசி. எண்ணினார்.
வ.உ.சி. வெளியில் இருந்தால், தங்களின் வணிக சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும் என்பதால்தான், அவர் மீது தேசத் துரோக வழக்கைத் தொடுத்து, அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்கள். அப்போது, பிரிட்டிஷ் அரசை ஆதரித்தவர்கள்கூட, அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்தார்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்தபோது, மாறியிருந்த இந்தியச் சூழலை வ.உ.சி.யால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காந்தியின் செயல்பாடுகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வ.உ.சி.யின் பார்வை தமிழிலக்கியத்தின் மீது அதன் பிறகு திரும்பியது. வ.உ.சி. என்ற மாமனிதரைப் பற்றிய சிறப்பான பதிவு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...