ராமாயண ரஸானுபவம்
இந்தப் புத்தகத்தின் நடையும் பார்வையும் முதிர்ந்த வாசகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.

ராமாயண ரஸானுபவம் - எஸ்.வி.கே; பக்.552; ரூ.525; அல்லயன்ஸ், சென்னை -4; ✆ 044-24641314.
கர்நாடக சங்கீத விமர்சன உலகில் எஸ்.வி.கே. என்று அறியப்பட்ட எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி, வால்மீகி ராமாயணத்தில் தான் படித்து, ரசித்து அனுபவித்த பிரதான காட்சிகளை வரிசைப்படுத்தி எழுதியுள்ள தொகுப்பே இந்நூல்.
நாரதரிடம் வால்மீகி மஹரிஷி, 'உலகில் உத்தம புருஷன் யார்?'என்று கேட்பதில் தொடங்கி, ராம பட்டாபிஷேகத்தில் நிறைவடைகிறது ராமாயணம்.
வால்மீகி மஹரிஷி இயற்றிய ராமகாதையின் முக்கிய பகுதிகள் விடுபடாமல் 71 அத்தியாயங்களில் கச்சிதமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலாசிரியர் எஸ்.வி.கே. இளம் வயதில் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞராக இருந்தவர். தியாகராஜ சுவாமிகளின் ராம பக்தி தோய்ந்த கீர்த்தனைகளைப் பாடும்போது, அவற்றின் ஆழத்தை உணர்ந்த அவர், வால்மீகி ராமாயணத்தை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். ராம இதிகாசம் தியாகராஜரின் கீர்த்தனைகளில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை தனது ஆராய்ச்சியால் அறிந்தார்.
அதைத் தொடர்ந்து வால்மீகி ராமாயணத்தை மாறுபட்ட மொழிபெயர்ப்பாக, தனது பாணியில் தமிழில் எழுதத் தொடங்கினார். அந்த வகையில் ராமாவதார இதிகாசம் முழுவதையும் ஆங்காங்கே வால்மீகியின் மூல ஸ்லோகங்களுடன் கதைப்போக்கில் தனது பார்வையையும் கலந்து படைத்துள்ளார்.
'தசரதனோ கெளஸல்யையோ ராமனின் பால்ய வருஷங்களை எப்படி ரஸித்தார்கள் என்று நம்மால் ஊகிக்க முடியாதபடி இருக்கிறது. ராமனின் பால்ய லீலைகளை விவரிப்பதில் வால்மீகி காலத்தைக் கழிக்காமல், பிறப்பிலிருந்து கிடுகிடுவென்று ஒருமூச்சில் சொல்லி, அவருடைய அவசரத்துக்கு ராமன் 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது' என்று எஸ்.வி.கே. கூறுவது அவரின் சுவையான பார்வைக்குச் சான்று.
ராமாயணத்தை வெறும் கதையாகப் படித்துக் கொண்டு போகாமல், ஆங்காங்கே முன்னும் பின்னுமாக காட்சிகளை இணைத்து, ரசித்து நோக்கும்போது வால்மீகி உத்தேசிக்கும் லட்சியம் படிப்பவரின் மனதில் உதித்துவிடும் என்கிறார் நூலாசிரியர்.
இந்த நூல், தமிழில் வெளிவந்துள்ள வித்தியாசமான வால்மீகி ராமாயண படைப்பு. இந்தப் புத்தகத்தின் நடையும் பார்வையும் முதிர்ந்த வாசகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...