சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆண்கள் நலம்

ஒரு புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:12 am

DIN

ஆண்கள் நலம்- ஜெ.தீபலட்சுமி-பக்.176; ரூ.250; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆ 75500 98666.

ஆயிரங்காலத்துப் பயிராக மண்டிக் கிடக்கும் ஆணாதிக்க களைகளுக்கு எதிரான ஒரு பெண் மனதின் வெடிப்பாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள இந்த நூலில், உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், மிக எளிதாகப் பெண்களும் செய்வதை எடுத்துக்காட்டுகிறது. 'திருமணத்துக்குப் பிறகும் வேலை செய்வாயா சுரேஷ்', 'தட்டை மாத்திக்கலாமா', 'இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா', 'எது என் உலகம்' என ஐம்பத்தைந்து அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் வருண்- நிலா, ராணி- மணி, இனியா-கண்ணன் என சில வகை மாதிரித் தம்பதிகள் வருகிறார்கள். தற்போதைய சூழலில் ஆண்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் நூலில் வரும் பெண்களும் செய்கிறார்கள். இருப்பினும் அவை அனைத்தையும் வீட்டு ஆண்கள் கல்லானாலும் மனைவி, புல்லானாலும் பெண்டாட்டி என கண்ணீருடன் ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். நாம் வாழும் அசமத்துவ வாழ்வின் பிரதிபிம்பங்களை இந்த நூலில் காணும்போது பகடி என்பதையும் தாண்டி உண்மை சுடத்தான் செய்கிறது.

நூல் முழுவதும் ஆணாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். பெண்கள் புடவை கட்டுவது, மஞ்சள் பூசிக் கொள்வது, தாலி அணிந்து கொள்வது போன்ற மேம்போக்கான விஷயங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தாலும், அடக்க ஒடுக்கமாக இருத்தல், சமையல் செய்தல், வீடு, குழந்தைகளைப் பேணுதல், வீட்டினுள்ளேயே அடைந்து கிடத்தல், அனைவரின் சொல்லுக்கும் அடிபணிதல், இவையெல்லாம் பெண்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.