தொ. பரமசிவன் படைப்புகள்
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை அறிய விரும்புகிற ஒவ்வொருவரும் ஒற்றை நூலாக வாசித்து வைத்திருக்க வேண்டிய சிறந்த தொகுப்பு.

தொ. பரமசிவன் படைப்புகள் - தொ. பரமசிவன்; பக்.880; ரூ.900; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை -17; ✆ 97910 71218.
தலைசிறந்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவரான மறைந்த தொ. பரமசிவனின் அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்பட சிறப்புமிக்க 9 நூல்களின் பெருந்தொகுப்பு இந்நூல்.
தமிழ் எனத் தொடங்கும் நூலின் முதல் இயலில் உணர்வும் உப்பும் பற்றி விளக்கும் ஆசிரியர், மகாத்மா காந்தி ஏன் உப்பு வரிக்கு எதிரான சட்ட மறுப்பைத் தொடங்கினார் என விவரிக்கிறார்.
வேத புராணங்களிலோ, பக்தி இலக்கியங்களிலோ இல்லாத வழக்கமான கோவில் நேர்ச்சையாக மக்கள் மொட்டையடித்துக் கொள்வது, துறவியர் செவ்வாடை அணிவது உள்பட பல்வேறு விஷயங்களும் தமிழகத்தில் நிலவும் பெüத்த எச்சங்கள் எனத் தெரிவிக்கிறார்.
பண்பாட்டு அசைவுகளில் தெய்வங்களும் சமூக மரபுகளும் பற்றி விரிவாக ஆய்வுகளைத் தரும் நூலாசிரியர், சிறு தெய்வ நெறிகள், அழகர்கோவில் அமைப்பு பற்றியெல்லாம் கூறுவதுடன், மதுரைக் கோவில் அரிசன ஆலயப் பிரவேசம் வரையிலும் விவரிக்கிறார்.
'இதுவே சனநாயக'த்தில் சமயமும் வழிபாடும் அலசப்படுவதுடன், நூலாசிரியரின் பல ஆய்வுக் கட்டுரைகளும் மதிப்புரைகளும் இடம் பெற்றுள்ளன.
'வழித்தடங்களில்' சங்க காலம் - இலக்கியங்கள் பற்றிய சில ஆய்வுகளுடன், பாரதி, பாரதிதாசன், கா.சு. பிள்ளை பற்றிய அவதானிப்புகளும் நிரம்பியுள்ளன.
'பரணி'ல் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிக் கூறும்போது, இவற்றில் எழுதியவற்றுக்கும் மேலாக, எழுதவும் பேசவும் நிறைய செய்திகள் இருப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
'தெய்வம் என்பதோர்' தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் பொதுவான நம் சிந்தனையில் பெரும் திறப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொகுப்பில் பாளையங்கோட்டை, நீராட்டும் ஆறாட்டும், மானுட வாசிப்பு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...