சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்

கம்யூனிஸம் காலாவதியாக வேண்டிய சித்தாந்தமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நூலாசிரியர் விரிவான பதிலை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

News image
Updated On :3 மார்ச் 2025, 1:51 pm

DIN

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்; பக். 256; ரூ.300; சுவாசம் பதிப்பகம், சென்னை - 27; ✆ 81480 66645.

தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலை, பேரழிவுகளை ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்றும், கம்யூனிஸத்தின் பெயரால் உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி என்றும், கம்யூனிஸம் உலகுக்கு கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு என்றும் தக்க ஆதாரங்களோடு இந்நூல் நிறுவுகிறது .

அதிகாரம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம் ஆகியவை நிரந்தரமல்ல. இவையனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்மையிலேயே இருந்தனவா; அல்லது துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு கைநழுவியதா என்பதை இந்நூல் விளக்குகிறது.

கம்யூனிஸம் காலாவதியாக வேண்டிய சித்தாந்தமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நூலாசிரியர் விரிவான பதிலை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

கம்யூனிஸ சித்தாந்தமா அல்லது தேசிய உணர்வா என்பதில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட குழப்பங்களையும், அடிப்படைச் சிக்கல்களையும் இந்நூல் விளக்குகிறது. இந்தியா மீதான சீனப் படையெடுப்பில் நியாயமான நிலைப்பாட்டை எடுக்காமல் சிந்தாந்த ஒற்றுமை அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட கம்யூனிஸ்ட்களை இந்நூல் விமர்சிக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சோவியத் யூனியனின் வழிகாட்டுதல் குறித்து ஆவணங்களுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக உலகெங்கும் கம்யூனிஸம் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கம், சிவப்பு பயங்கரவாதம் ஆகியவற்றை வெறுமனே விமர்சிக்காமல் அதற்கான ஆதாரங்களுடன் நூலாசிரியர் நிறுவியுள்ளார் என்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.