எதுவும் இன்றி
நூலாசிரியரின் கடுமையான உழைப்பு, இலக்கை நோக்கிய உறுதியான பயணம் இன்றைய இளம்தலைமுறையினருக்கு வழி காட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

எதுவும் இன்றி - டாக்டர் சி.பழனிவேலு: பக்.334 ; ஜெம் பவுண்டேஷன், 45 ஏ, பங்கஜாமில் ரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர்-641 045.
லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை ஒரு புதிய தொழில்நுட்பமாக அறிமுகமான காலத்திலேயே அதைச் செய்யத் தொடங்கியவர் நூலாசிரியரான டாக்டர் சி.பழனி
வேலு. அதில் பல புதிய அறுவை சிகிச்சைகளை செய்து காட்டி பிற மருத்துவர்களுக்கும் விளக்குபவர்; பயிற்சி அளிப்பவர். எளிய மனிதர்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும்
என்ற உள்ளுணர்வின் காரணமாகவே இந்த சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார்.
இந்த நிலையை அடைய அவர் தனது இளமைக்காலம் முதல் பட்டபாடுகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் மல்குகிறது. மேல் சாத்தம்பூர் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், அந்த ஊர் வானம் பார்த்த பூமியாக இருந்ததால், எதையும் பயிர் செய்ய முடியாத நிலையில், அவருடைய தந்தை வேன் ஒன்றை வாங்கி அதை ஓட்டுவதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தியிருக்கிறார். அந்த வேன், விபத்தில் சிக்கி, நொறுங்கிப் போக, நூலாசிரியர் குடும்பத்தின் மேல் சாத்தம்பூர் கிராம வாழ்க்கையும் நொறுங்கிப் போகிறது. அதன் பிறகு வேலைக்காக குடும்பம் மலாயாவுக்கு இடம்பெயர்கிறது.
ஏழு வயதில்தான் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியிருக்கிறார். ஐந்தாம் வகுப்பு வரை அங்கே படித்தவர், அதன் பிறகு மலாயாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிறகு, பள்ளியில் சேர்க்க மறுத்திருக்கிறார்கள். வையாபுரி என்ற தலைமையாசிரியரின் உதவியால் பள்ளியில் சேர்ந்து படித்தபோது மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்திருக்கிறார். பலரின் உதவியினால், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவராகி இப்போது மிக உயர்ந்த மருத்துவராகத் திகழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...