இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள்!- கலைமாமணி யோகா
பாரதிராஜா குறித்து முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உதவும் அரிய பொக்கிஷம் இந்த நூல்.

இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள்!- கலைமாமணி யோகா; பக்.256; ரூ.600; யோகா-சாவித் பப்ளிகேஷன்ஸ், (விற்பனை உரிமை: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்), சென்னை; ✆ 9940446650.
இந்த நூல் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கும், புகைப்படக் கலைஞர் யோகாவுக்கும் இடையேயான நட்பின் வரலாறு மட்டுமல்ல; வெளிக்கொணரப்படாத திரைத்துறையின் ருசிகரத் தகவல்கள் எண்ணற்றவை நிறைந்துள்ள நூலுமாகும். அதேசமயம், பாரதிராஜாவின் கலை, வாழ்வுத் தடங்களில் தான் பங்கேற்ற நிகழ்வுகளைத் தொகுத்து பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
'கோபப்படும் நண்பர்களைச் சமாதானப்படுத்துவதில் சிறந்தவர் யோகா' என்று நல்லி குப்புசாமி செட்டியாரின் பாராட்டு மழையில் நனைகிறார் யோகா.
'தனது தாய் கொடுத்த 300 ரூபாய் பணத்துடன் சென்னைக்கு லாரியில் பயணித்த பாரதிராஜா, வாழ்வில் உயர்ந்து சொந்த வீடு வாங்கியது,
அவருடைய அம்மாவை வைத்து பால் காய்ச்சியது, அன்றே நூலாசிரியர் உள்பட தனது மூன்று நண்பர்களுடன் ஒரே இலையில் சாப்பிட்டது,
'கேப்டன் மகள்' படத்தில் நடிக்க நூலாசிரியருக்கு பாரதிராஜா வாய்ப்பளித்தது, பாரதிராஜாவின் அமெரிக்க நண்பர்கள் இல்ல திருமணத்தில் நூலாசிரியர் பங்கேற்றது...' என்று நூல் முழுக்க பாரதிராஜாவுடனான தனது நட்பைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். வாசிப்பவர்களுக்கு நேரில் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது.
பாரதிராஜா தனது சுயசரிதையை எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ, அதேபோன்று நேர்த்தியாக, அழகாக, பாரதிராஜாவின் இளமைக்காலம், திரையுலகக் காலம், குடும்ப வாழ்க்கை, வாழ்வின் ருசிகர நிகழ்வுகள் என அனைத்தும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
வண்ண வடிவமைப்பில், பக்கத்துக்குப் பக்கம் திரைக் கலைஞர்களின் அரிய புகைப்படங்களுடன், திரையுலக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடத் தோன்றும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாரதிராஜா குறித்து முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உதவும் அரிய பொக்கிஷம் இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...