சமூக நீதிப் போராளிகள்
கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

சமூக நீதிப் போராளிகள் - ஜெகதா; பக்.244; ரூ.260; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044- 4507 4203.
மனித உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது என்று கூறும் நூலாசிரியர், சமூக நீதிக்காகப் போராடியவர்களின் வரலாற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, போராட்டங்களின் மூலமாகவும், சட்ட ரீதியாகவும் பாடுபட்ட போராளிகளின் உச்சபட்ச குரலொலிகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது.
'நீதி என்ற சொல்லுக்கு கட்டு அல்லது பிணைத்தல் என்று பொருளாகும். சமூக நீதி என்பது மக்களுக்கு இடையே சமத்துவம், பல்வேறு சமூக அம்சங்களின் தாரசு நிலை பார்வையை மையம் கொண்டதாக அர்த்தப்படுகிறது' என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
அந்த வகையில், 18 போராளிகளின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன. புலையர் இனத்தைத் தீண்டாமைத் தளையில் இருந்து அகற்ற போராடிய கேரளத்தைச் சேர்ந்த மகாத்மா அய்யன்காளி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் முகங்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அய்யா வைகுண்டர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜோதிராவ் புலே, ஆன்மிகக் குரு ஸ்ரீநாராயண குரு, உள்ளிட்ட 18 போராளிகளின் வரலாறு வியக்க வைக்கிறது.
தேசிய அளவிலும், தமிழகத்திலும் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையப் பாடுபட்ட இவர்களின் வரலாற்றை இளையத் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியமானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...