ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாராணசி

நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட ஒரு முறை காசிக்குச் சென்றுவர வேண்டும் என்று நினைக்கச் செய்கிற நாவல்.

News image
Updated On :17 மார்ச் 2025, 8:54 am

DIN

வாராணசி - எம்.டி. வாசுதேவன் நாயர்; தமிழில்: சிற்பி; பக்.192; ரூ. 200; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆ 9976144451.

வாராணசியைக் களமாகக் கொண்டு நாயகன் சுதாகரனின் வாழ்க்கைக் கதையை நிகழ்வும் நனவுமாக முன்னும் பின்னும் நகர்த்திச் செல்கிறார் எம்.டி. வாசுதேவன் நாயர்.

இளைஞனாகக் கேரளத்தில் தொடங்கி, மும்பை, பெங்களூரு, வாராணசி, சென்னை வழியே ஓய்வில் கோவை வந்தடையும் சுதாகரன், வாராணசிக்கான மறு பயணத்துடன், கழிந்த வாழ்க்கைக்குள்ளும் மீண்டும் சென்று வருகிறான்.

நாவலில் செளதாமினி, சாந்தா அக்கா, கீதா, சுமிதா என பெண்களின் உறவுகளிலிருந்து தப்பியோடும் சுதாகரன், பாரிஸில் மிருதுளா என்ற பெண்ணிடம் வந்து சேருகிறான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கதை. இவர்களில் சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார் கீதா.

வாராணசி தொடர்பான கதைகள், நம்பிக்கைகள், மக்கள், அவர்களின் நடவடிக்கைகள் என, நாவல் முழுவதும் போகிறபோக்கில் வாராணசியைப் பற்றி ஏராளமான சித்திரங்கள். கங்கை, படகுகள், கபால மோசன தீர்த்தம், காலபைரவர் கோவில், கடை வீதிகள், பிணங்கள் எரியும் மணிகர்ணிகை, சக்ர புஷ்கரணி, தசாசுவமேத கட்டம், முக்திபவன்கள் எல்லாவற்றையும் நேரில் காண்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

'ஓடி, ஓடிப் போனாலும் மனிதனுக்கு ஒளிந்துகொள்ள ஏது இடம்? ததாகதன் சொல்லவில்லையா? தன் சொந்த கரும பலன்களிலிருந்து ஒருவன் தப்பித்துக் கொள்ள வாய்ப்பான இடத்தைக் கண்டறிய முடியாது' - இது- நாவலில் ஒரு வரி.

எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆய்வு நூலைப் போல வாராணசி பற்றிய ஏராளமான விஷயங்களை, இருந்து, உணர்ந்து, துய்த்தவராகப் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர். நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட ஒரு முறை காசிக்குச் சென்றுவர வேண்டும் என்று நினைக்கச் செய்கிற நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.