ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்நாட்டுப் பெண்களும் ஜோதிடமும் அறிவியல் முகத்துடன்

பஞ்சாங்கம், ஜாதகம், நல்ல நேரம், கரிநாள், உடுமகாதசை, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம் என பல தலைப்புகளில் படிக்கத்தகுந்த பல விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

News image
Updated On :24 மார்ச் 2025, 7:58 am

DIN

தமிழ்நாட்டுப் பெண்களும் ஜோதிடமும் அறிவியல் முகத்துடன் - பெ. கணேசன்; பக்.226; ரூ.270; பொதிகை மைந்தன் பதிப்பகம், சென்னை-100; ✆ 93810 67141.

அறிவார்ந்த சமுதாயத்தினர், பகுத்தறிவாளர்களால் ஏற்க முடியாத ஜோதிடம் மூட நம்பிக்கை என்ற பட்டியலில் இருக்கிறது. ஆனாலும் பல நூற்றாண்டுகளாய் தமிழகத்தில் இன்னமும் வீடுதோறும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதுவும் பெண்கள் மத்தியில் ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்த நூலில் 28 தலைப்புகளில் பல ருசிகரத் தகவல்கள் அறிவியல் பார்வையுடன் இடம்பெற்றுள்ளன. தமிழகப் பெண்களுக்கு அவர்கள் குழந்தை பெற்ற பிறகுதான் ஜோதிடத்தின் மீது அதீத பற்று ஏற்படுகிறது என்று நூலாசிரியர் கூறுவது ஏற்புடையதாக இருக்கிறது.

கிரேக்க நாட்டில் புகழ் பெற்ற ஜோதிடர் நெக்டானிபஸ் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மாவீரர் அலக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியா, தன் மகனை ஈன்றெடுக்க பிரசவத்தை குறித்த நேரத்தில் நடத்துவதற்காக கட்டிலின் உயரத்தை உயர்த்தி, தாழ்த்தி செய்த நடவடிக்கைகள், அதன்பிறகு உரிய நேரத்தில் அலக்ஸாண்டர் பிறக்க, அவர் ஜோதிடர் கூறியது போல உலகை ஆண்டார் என்ற தகவல்கள் படிக்க சுவாரசியமாக உள்ளன.

பஞ்சாங்கம், ஜாதகம், நல்ல நேரம், கரிநாள், உடுமகாதசை, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம் என பல தலைப்புகளில் படிக்கத்தகுந்த பல விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனினும் இயற்கைப் பேரிடர், போர், கரோனா போன்ற நிகழ்வுகள் ஜாதக அமைப்புகள் எவ்வாறு இருப்பினும் நிகழ்கிறது என்பதுதான் இந்நூலின் வாதம்.

ஜோதிடம் பொருளற்றது என்றும் ஜோதிட விதிகளை நிரூபிக்க உலகம் முழுமைக்கும் தரவுகள் பொது வெளியில் வைக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.