
உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்)
உயிர், அழி கம்பி, நாவல் மரம், சவப்பெட்டி உள்பட 12 தலைப்புகளில் எதார்த்த வாழ்க்கை நிலவரங்களும், மனித உளவியலும் கதைக் களமாகப் பயணிக்கின்றன.

உயிர் (மொழிபெயர்ப்புக் கதைகள்) - தமிழில்: இராம. குருநாதன்; பக். 135; ரூ. 200; விழிகள் பதிப்பகம், சென்னை 600 040. ✆ 94442 65152.
உயிர், அழி கம்பி, நாவல் மரம், சவப்பெட்டி உள்பட 12 தலைப்புகளில் எதார்த்த வாழ்க்கை நிலவரங்களும், மனித உளவியலும் கதைக் களமாகப் பயணிக்கின்றன.
வனவிலங்குகளை காக்க அரசு என்னதான் சட்டமியற்றினாலும் தனி மனித ஒத்துழைப்பின்றி அவற்றை செயல்படுத்துவது சிரமம் என்பது "உயிர்' என்னும் தலைப்பில் உயிரோட்டமாக சொல்லப்பட்டுள்ளது. சிறு வயதில் மானை வேட்டையாடிய இளைஞர் அதற்கு பிராயசித்தமாக வனவிலங்கு பாதுகாவலன் வேலையை வேண்டி ஏற்கிறார். ஆனால், வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய உயரதிகாரியே புலி வேட்டையாட துப்பாக்கியுடன் களமிறங்கி, இருவாட்சி பறவையை வேட்டையாடுகிறார். இதை எதிர்க்கும் வனவிலங்கு காப்பாளர் வேலையிழக்கிறார்.
அன்றாடம் செய்தித் தாள்களில் காணும் செய்திகளை தனது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பெண், வயது வந்த தனது மகளைப் பாதுகாக்க நடத்தும் மனப் போராட்டம் 'அழிகம்பி' என்னும் தலைப்பில் விரிவடைகிறது. நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பெண்ணை மேலும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இதுபோன்ற பிரச்னைகளைக் கையாள கதைக்களம் வடிகால் அமைத்துக் கொடுக்கிறது.
ஒரு மாநில தலைமைச் செயலகத்தில் ஒருவர் மீது விழுந்த மரத்தை அகற்ற நடைபெறும் சட்டப் போராட்டம் நமது ஜனநாயகத்தின் கோப்புகள் மீதான குறைகளை தோலுரித்துக் காட்டுகிறது 'நாவல் மரம்' என்னும் தலைப்பிலான கதை.
பாலியல் தொழிலாளர் வாழ்க்கைப் போராட்டத்தை 'இப்படியும் உண்டா', 'பகடைக்காய்' போன்ற தலைப்புகளில் இடம்பெற்ற கதைகள் நூலுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






