சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள் 100

நற்பண்புகளே தனிமனிதனை சிறந்தவர்களாக்குகிறது என்று அறிவுறுத்தும் இந்த நூல், ஒவ்வொரு இடத்திலும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், நமக்கான கடமைகளை முறையாக செய்தாலே நாம் மேன்மேலும் வளர முடியும் என்பதையும் தெளிவாக உரைக்கிறது.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:36 pm IST

உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள் 100 - கவிஞர் அரிமதி இளம்பரிதி; பக். 176; ரூ. 200; ஆர்.ஆர். நிலையம், சென்னை-600 014. ✆ 94444 62284.

கதைகள் என்றாலே நம் அனைவருக்கும் அலாதி பிரியம். அதிலும், தன்னம்பிக்கை அளிக்கும், ஊக்கப்படுத்தும் வகையிலான கதைகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம் என்பதால், நல்வழிப்படுத்தும் 100 கதைகளை 50 படங்களுடன் தொகுத்து ஒரு புத்தகமாக்கி தந்துள்ளார் நூலாசிரியர்.

ஒவ்வொரு கதையிலும் அன்றாட வாழ்க்கையில் நாள்தோறும் நாம் கடந்து செல்லும் கதாபாத்திரங்களை நாயகர்களாக்கி அவர்கள் வழியாக நமக்கு நற்பண்புகளையும், கருத்துகளையும் கூறுகிறார்.

சிறுசிறு சம்பவங்கள் 100 கதைகளாக்கப்பட்டு இருக்கின்றன. படிக்கும்போது வாசகர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க கதைகள் அனைத்தும் சுருக்கமாக, கூற வந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பது சிறப்பு.

பிறருக்கு அறிவுரை கூறும் முன்பு, நம்மிடம் உள்ள அந்தத் தவறை நாம் முதலில் திருத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொரு வீட்டிலும் வளரும் குழந்தைகள், பெற்றோரின் வார்த்தைகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நடிகரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகன், முதலில் தனது குடும்பத்தை கவனிக்க வேண்டும்; ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் உலகம் உள்ளவரை அவர்கள் பெயர் நிலைத்திருக்கும். சாகாவரம் பெற்று திகழ முடியும் என்பதுபோன்று ஒவ்வொரு கதையும் நல்ல வாழ்க்கைப் பாடத்தை அல்லது வழிகாட்டுதலை வழங்கி நம் உயர்வுக்கு வழிகோலுகின்றன.

நற்பண்புகளே தனிமனிதனை சிறந்தவர்களாக்குகிறது என்று அறிவுறுத்தும் இந்த நூல், ஒவ்வொரு இடத்திலும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், நமக்கான கடமைகளை முறையாக செய்தாலே நாம் மேன்மேலும் வளர முடியும் என்பதையும் தெளிவாக உரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.